வந்தவாசி: வந்தவாசி அருகே புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 2000 நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து டாஸ்மாக் கடையில் கொடுத்து குடிமகன் ஒருவர் மதுவையும், மீதி பணத்தையும் வாங்கி சென்றுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி இந்தியன் வங்கியில் மருதாடு டாஸ்மாக் கடை விற்பனையாளர் நேற்று காலை பணம் செலுத்தினார். அப்போது பணத்தை எண்ணிய காசாளருக்கு அதில் இருந்த 2 ஆயிரம் நோட்டை பார்த்ததும் சந்தேகம் ஏற்பட்டது. அதை அவர் ஆய்வு செய்ததில் அது 2 ஆயிரம் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து காசாளர் கொடுத்த தகவலின் பேரில் வந்த போலீசார் டாஸ்மாக் ஊழியரிடம் விசாரணை செய்தனர்.
அதில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் டாஸ்மாக் கடைக்கு குடிமகன் ஒருவர் வந்து, ‘பஸ் வருகிறது அவசரம், உடனடியாக 2 குவாட்டர் கொடுங்க என்று கூறி, 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து மதுவை வாங்கியதுடன், மீதி தொகை 1,800 வாங்கி சென்றுள்ளார். கடை விற்பனையாளர் முதன் முதலில் கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டை பார்த்ததும் இதுதான் 2 ஆயிரம் புதிய நோட்டு என ஏமாந்ததும் தெரியவந்தது.இச்சம்பவம் வங்கி ஊழியர்களிடமும், வந்தவாசி பகுதியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.