இன்று நடைபெற இருக்கும் அதிபர் எதிர்ப்பு போராட்டத்தின்போது, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குச் செல்வதைத் தடுப்பதற்காக, தென் கொரிய தலைநகர் சோலில் பல்லாயிரக்கணக்கான கலவர தடுப்பு காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நகரத்தின் வழியாக அணிவகுத்துச் செல்ல இருப்பதாக எதிர்பார்க்கப்படும் ஒரு லட்சம் போராட்டக்காரர்களில் கடும்போக்கு இடது சாரி செயற்பாட்டாளர்கள்ளும், போராளி விவசாயிகளும் அடங்குகின்றனர்.
தென் கொரிய நிறுவனங்களில் இருந்து பெருளவு பணத்தை மிரட்டி வாங்க முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் சோய் சூன் சில்-உடன், அதிபர் பார்க் குன் ஹை வைத்திருக்கும் நட்புறவை காரணம் காட்டி, அதிபர் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
ஏமாற்றுதல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் சோய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதிபர் பார்க்கின் அலுவலக அதிகாரிகளும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
அதிபர் பார்க்கின் அலுவலக அதிகாரிகளிடமும் விசாரணை |