திருப்பரங்குன்றம்: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நடந்த வாகன சோதனையில், இதுவரை ரூ.2.17 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அங்கு வாகன சோதனை தீவிரமாக நடந்து வருகிறது. பணம், தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பணம் பறிமுதல்:
இந்நிலையில், இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் கூறியதாவது: தேர்தலை முன்னிட்டு, கடந்த மாதம் 18ம் தேதி முதல் 7 ம் தேதி வரை நடந்த வாகன சோதனையில் ரூ. 2.18 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.90.49 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப்பொருட்களும், ரூ. 1.27 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
துணை ராணுவப்படை வருகை:
இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 3 கம்பெனி துணை ராணுவப்படையினர் திருப்பரங்குன்றம் வந்துள்ளனர். மத்திய தொழிலக பாதுகாப்பு படையை சேர்ந்த 246 வீரர்கள் தொகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இன்று கொடி அணிவகுப்பு நடத்தி, தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.