தாம்பரம் :- வேளச்சேரி சாலையில், மேடவாக்கம் சந்திப்பில், 3 கி.மீ.,ல் மேம்பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்பாலப் பணி முடிந்ததும், மேடவாக்கத்தில் நெரிசல் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் சமீபகாலமாக நெரிசல் அதிகமாக உள்ளது. தாம்பரத்தில் இருந்து சோழிங்கநல்லுார், மாம்பாக்கம், மடிப்பாக்கம் செல்ல, மேடவாக்கம் சந்திப்பில் இருந்து திரும்பி செல்ல வேண்டும்.அங்கு, 500 மீட்டர் இடைவெளியில், அடுத்தடுத்து மூன்று சந்திப்புகள் உள்ளதால், மேடவாக்கத்தை வாகனங்கள் கடக்க, குறைந்தபட்சம், 20 நிமிடங்கள் ஆகின்றன. இ.சி.ஆர்., மற்றும் ஓ.எம்.ஆர்.,ரில் தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளதால், நாளுக்கு நாள் இந்த சாலையை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கடந்த, 2012 கணக்கெடுப்பு படி, இரு மார்க்கத்தில், 24 மணி நேரத்தில், இருசக்கர வாகனங்கள் தவிர, 11 ஆயிரம் வாகனங்கள் மேடவாக்கம் சந்திப்பை கடந்து செல்வது தெரியவந்தது.அதே வேளையில், லாரிகள் அதிகம் செல்லும் சாலையானதால், அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகின்றன. போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்க, வேளச்சேரி - தாம்பரம் சாலையில், மேடவாக்கம் சந்திப்பில், 133 கோடி ரூபாயில், 3 கி.மீ.,க்கு தொடர் மேம்பாலம் கட்ட தீர்மானிக்கப்பட்டது.இதற்கு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பணி துவங்கியது. 'சன்சைன்' என்ற நிறுவனம், கட்டுமான பணியை செய்து வருகிறது. பால திட்டத்திற்காக, நிலம் எடுப்பு மற்றும் இழப்பீடு வழங்கும் பணி, ஆறு மாதங்களாக நடந்தன.தற்போது, நிலம் எடுப்பில் மீதமிருக்கும் பணிகளும், மேம்பால கட்டுமான பணிகளும், ஒரே நேரத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. தற்போது வரை, 20 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மொத்தம், 36 மாதங்களில் பணியை முடிக்க, ஒப்பந்த நிறுவனத்திற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட கால அவகாசத்தில், அதாவது, 2018 துவக்கத்தில் மேம்பால பணியை முடிக்க, திட்டமிடப்பட்டுள்ளது.இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:இவ்வளவு நெரிசலுக்கும் இடையில், தொய்வு இல்லாமல் பணிகள் நடந்து வருகின்றன. துாண்கள் அமைக்க நாட்கள் அதிகம் தேவை. அதன்பின், பணி விரைவாக முடிந்துவிடும். கூடுதல் கால அவகாசம் இல்லாமல் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.நிலம் எடுப்பின்போது, அகற்றப்பட்ட மின் கம்பங்களை சரி செய்யும் பணியும் நடக்கிறது. பணி முடிந்தால், 10 வழி சாலையாக, மேடவாக்கம் சந்திப்பு அமையும்; அப்போது போக்குவரத்து நெரிசல் இல்லாத சந்திப்பாக இது மாறும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிறப்பு அம்சங்கள் என்ன?l வேளச்சேரி - தாம்பரம் சாலையில், ரைஸ் மில் சந்திப்பில் இருந்து, 1 கி.மீ.,ல் ஒரு மேம்பாலம் அமைகிறதுl அதேபோல், தாம்பரம் - வேளச்சேரி சாலையில் காயிதே மில்லத் கல்லுாரி அருகில் இருந்து, ரைஸ் மில் சந்திப்பு வரை, 2 கி.மீ.,ல் மேம்பாலம் அமைகிறதுl ஒவ்வொரு பாலமும், 12 மீட்டர் அகலத்தில் அமையும்l பாலத்திற்கு, 20 மீட்டர் இடைவெளியில் துாண்கள் அமைக்கப்படுகின்றனl சோழிங்கநல்லுார், மாம்பாக்கம் திரும்பும் சந்திப்பில், துாண்களின் உயரம், 6.5 மீட்டர் உயரம் அமையும்l மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும்போது, தாம்பரம் மார்க்கத்தில், மேம்பாலத்தில் மூன்று வரிசை வாகனங்கள், கீழ் சாலையில் இரண்டு வரிசை வாகனங்கள் செல்ல முடியும்l வேளச்சேரி மார்க்கத்திலும் அதே போல் வாகனங்கள் செல்லும்l மேடவாக்கம் சந்திப்பு, 10 வழிச் சாலையாக மாறுவதால், போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
எத்தனை வாகனங்கள்?கடந்த, 2012 வாகன கணக்கெடுப்பு படி, மேடவாக்கம் சந்திப்பில், வேளச்சேரி - தாம்பரம் இரு மார்க்கத்தில் கடக்கும் வாகனங்கள் (பைக் தவிர) தாம்பரம் மார்க்கம் (சோழிங்கநல்லுார், மாம்பாக்கத்தில் இருந்து வரும் வாகனங்களை சேர்த்து)
வாகனம் எண்ணிக்கைபேருந்துகள் 1,500கார், ஆட்டோ 1,000லாரிகள் 2,000லோடு ஆட்டோ 2,000வேளச்சேரி மார்க்கம்பேருந்துகள் 600கார், ஆட்டோ 1,000லாரிகள் 700லோடு ஆட்டோ 1,500மடிப்பாக்கம் மார்க்கம்பேருந்துகள் 50கார், ஆட்டோ 100லாரிகள் 100லோடு ஆட்டோ 100