உடுமலை : பிரதான மழை நீர் கால்வாயாக இருக்கும், தங்கம்மாள் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
உடுமலை நகரில், மழைக்காலத்தில், வெளியேறும் தண்ணீர், அனைத்து பகுதிகளிலிருந்தும் வெளியேற்றப்படும் கழிவுநீர் தங்கம்மாள் ஓடை வழியாக செல்கிறது. கழுத்தறுத்தான் பள்ளமும் முக்கிய மழை நீர் ஓடையாக உள்ளது.
இரண்டு ஓடைகளிலும் நீண்ட காலமாகவே, ஆக்கிரமிப்புகள் உள்ளன. வீடுகளை கட்டியும், குடிசைகள் அமைத்தும், கழிவுநீர் செல்ல வழியின்றி ஆக்கிரமித்துள்ளனர்.
ஓடைகளை துார்வார எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், ஆக்கிரமிப்புகளும் கண்டுகொள்ளப்படவில்லை. ஓடைகளின் பாதி பகுதிக்குமேல் குடியிருப்புகள் இருப்பதால், அதன் அகலம் குறுகியது.
இந்நிலையில், ஆக்கிமிரப்புகளை அகற்றி, கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்ல சீரான பாதையை ஏற்படுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடப்பட்டது. நகராட்சி நிர்வாகம் அதிரடிஇதன் அடிப்படையில், நடப்பாண்டில், வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், இப்பிரச்னைகளுக்கு தீர்வாக, முதற்கட்ட நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது. முதலில் கழுத்தறுத்தான் பள்ளத்தில் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அடுத்தகட்டமாக, தற்போது, தங்கம்மாள் ஓடையிலும் இப்பணிகள் துவங்கியுள்ளன. தங்கம்மாள் ஓடையில், இடத்தை ஆக்கிரமித்து பலரும் வீடு கட்டி அதை வாடகைக்கும் விட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு இடத்தில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற, நகராட்சி நிர்வாகம் கெடு வைத்துள்ளது.
கடந்த மாதம் 25ம் தேதி முதல் பதினைந்து நாட்களுக்குள், ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வெளியேற வேண்டும் என எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் தங்கம்மாள் ஓடை குறுக்கிடும் பாலம் உள்ளது. அங்கு ஓடையை ஒட்டி அமைக்கப்பட்ட நர்சரியின் ெஷட்கள் பிரிக்கப்பட்டன. அதன் வெளிச்சுவர் பொக்லைன் மூலம் இடிக்கப்பட்டன. இதனை நகராட்சி கமிஷனர் சரவணக்குமார் மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டனர்.
நகராட்சி கமிஷனர் கூறுகையில், '' தற்போது பருவமழை துவங்கியுள்ளது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
அங்கு 100 அடியில் அகலப்படுத்தப்படும். தங்கம்மாள் ஓடையில் விரைவில் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.