மும்பை : புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு ரூபாய் நோட்டுக்களுக்கு ஏற்றவாறு நாடு முழுவதிலும் இதுவரை 47,000 ஏடிஎம் இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.500, 1000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக கடந்த 8-ந்தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு பதிலாக புதிய ரூ.2000, 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட மத்திய அரசு முடிவு செய்தது. ரூ.2000 நோட்டுகளே தற்போது கிடைக்கிறது. புதிய 500 ரூபாய் நோட்டுகள் நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்னும் புழக்கத்துக்கு வரவில்லை. தற்போது உள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில் புதிய ரூ.500 மற்றும் 2000 நோட்டுகளை பயன்படுத்த இயலாது. இதனால் புதிய நோட்டுகளை வைப்பதற்காக நாடு முழுவதும் ஏ.டி.எம். இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 8-ந்தேதியில் இருந்தே இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. நாள் தோறும் 12,500 ஏ.டி.எம். இயந்திரங்களை மாற்றி அமைக்குமாறு உத்தர விடப்பட்டு இருந்தது. ஆனால் நாடு முழுவதும் இதுவரை 47,000 ஏ.டி.எம். இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன. அதாவது மொத்தம் உள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில் 25 சதவீதமாகும். நாட்டில் மொத்தம் 2.2 லட்சம் ஏ.டி.எம். இயந்திரங்கள் உள்ளன. முக்கியமான 30 நகரங்களில் இந்த மாத இறுதிக்குள் அனைத்து ஏ.டி.எம். இயந்திரங்களையும் மாற்றி அமைப்பதை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
English Summary:
Mumbai, according to the newly introduced notes 47,000 ATM machines across the country, has been revised so far.