புதுடில்லி: நாம்
ஏன் அரசை குறை சொல்கிறோம். இது உண்மையிலே 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று செய்தி பரப்பிய தொலைக்காட்சிகளின் தவறு. அரசாங்கம் நாளை முதல் 500, 1000 நோட்டுகளின் மதிப்பு செல்லாது என்று சொல்லவில்லை. அந்த நோட்டுகளை வாபஸ் பெற்றுக்கொண்டு, அதற்கு ஈடான தொகையை தருவதாகத்தான் சொல்லி இருக்கிறது.
நாம் கவனிக்க வேண்டியவை :
1. இன்று புழக்கத்தில் இருக்கும் 10,000 நோட்டுகளில் 40 நோட்டுகள் கள்ள நோட்டுகள். இனி இந்த நோட்டுகள் பயனற்றதாகி விடமுடியும்.
2. இரண்டரைஆண்டுகளாக கள்ள நோட்டுகளை ஒழிக்க என்ன செய்தது அரசு என்று கேட்டோம். கள்ள நோட்டுகளை ஒழிப்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. அதை செய்ய மக்களின் ஒத்துழைப்பு நிச்சயம் தேவை. கள்ள நோட்டுகள் பொதுவாகவே 500, 1000 ஆகத் தான் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவற்றை புழக்கத்தில் கொண்டு வர முடியும் (100, 2000 நோட்டுகளாக ). நாட்டின், நாட்டு மக்களின் நன்மைக்காக மிகப் பெரிய இந்த முடிவை கொஞ்சம் சிரமேற்கொண்டு ஏற்று தான் ஆகவேண்டும்.
3. இந்த முடிவால் தற்போது சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளவர்கள், திருமணம் போன்ற விசேஷங்கள் வைத்திருப்பவர்கள், இன்று கையில் பணம் இல்லாமல் ஏடிஎம்மில் வைத்திருப்பவர்கள் சிரமப்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதை விடவும் மிகுந்த சிரமத்துக்குள்ளாக இருப்பது, லட்சங்கள் கோடிகள் என கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் தான். ஏனெனில். 11-11-2016 முதல் வங்கியில் ரொக்க பரிமாற்ற அளவு ஒரு நாளைக்கு 10000ம் தான். வாரத்திற்கு 20000ம் தான். ஏடிஎம் ரொக்க பரிமாற்றம் ஒரு நாளைக்கு 2000ம் தான். ஆகவே இன்னும் இருக்கும் 50 நாட்களுக்குள் 4 முதல் 5 லட்சத்துக்கு மேல் கருப்பு பணத்தை சட்டத்திற்குட்பட்ட முறையில் மாற்றி, வெள்ளையாக்க இயலாது. கண்டிப்பாக ஆதார் அல்லது பான் எண் மூலம் மீதி பணத்தை வங்கிகளில் கட்டி ஆகவேண்டும். எனவே பெரிய கவலை, பெரிய பணம் வைத்திருப்பவர்களுக்கு தான்.
4. மேலும் சாமானியன் இந்த சூழ்நிலைகளை எதிர் கொள்ளத்தான். ஜன் தன் யோஜனா போன்ற வங்கி பரிவர்த்தனை தொடர்பான திட்டங்களை முதலில் அரசு ஊக்குவித்தது.
5. மேலும் இன்னும் வங்கிக் கணக்கு இல்லாத சாமானியர்கள் வங்கிக் கணக்கு துவக்க இது ஒரு வாய்ப்பாகிறது.
6. ஏன் இந்த கணக்கில் வராத பணத்தை நாமாகவே தெரிவிக்க, தனிச்சட்டம் இயற்றப்பட்டு, செப்டம்பர் 31 வரை காலக்கெடு கொடுத்திருந்தது அரசு. நியாயமாக வழங்க வேண்டிய அத்தனை வாய்ப்பையும் வழங்கிவிட்டு தான் இப்பொது இதை செய்கிறது அரசு. எல்லாமே முன்னரே பக்காவாக திட்டமிடப்பட்டுள்ளது சில ஆண்டுகளாக. இது வெறும் சில நாள் கஷ்டம்.
7. ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க இந்திய பொருளாதாரத்தை நிலையாக்க, வளர்க்க இந்த சிரமத்தை நாம் தாங்கி கொள்ளத்தான் வேண்டும். ஏன் மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் வந்த போது 15, 20 நாட்கள் முதல் மாதக் கணக்கில் நாம் இதை தாங்கிக்கொண்டு மீண்டு வரவில்லையா. அது போல் நாம் ஒருவருக்குஒருவர் உதவிகொண்டு இந்த 2 நாட்களை கடக்க வேண்டியதுதான். நாட்டின் முன்னேற்றத்துக்காக இதை கூட தாங்கிக்கொள்ளவில்லை என்றால் அரசாங்கத்தால் மட்டும் என்ன செய்துவிட முடியும்.
8. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 60 ஆண்டுகளில் மொத்தமே 9 கோடி வரை மட்டுமே வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டன. ஆனால், மோடியின் ஆட்சியில், ஜன் தன் திட்டத்தின் கீழ், சில ஆண்டுகளிலேயே 24 கோடி கணக்குகள் துவக்கப்பட்டன. இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
8. கறுப்பு பணத்திற்கெதிராக நானும் போராடுகிறேன் களத்தில் இறங்கி என்று பெருமை கொள்வோம். பொறுத்துக்கொள்வோம். எல்லாம் கொஞ்ச காலம்.