புதுடில்லி : ரூ.500, 1000 நோட்டுக்கள் நேற்று இரவு 12 மணியுடன் வாபஸ் பெறப்படுகிறது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் கடுமையாக திண்டாடி வருகின்றனர்.
எங்கெல்லாம் மாற்றலாம் :
500, 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்படுகிறது என அறிவித்துள்ள மத்திய அரசு ஏடிஎம்.,கள் இன்றும் நாளையும் செயல்படாது எனவும் அறிவித்துள்ளன. மக்கள் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை நவ. 11 ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில், ஆதார் அடையாள அட்டையை காட்டி மாற்றிக் கொள்ளலாம். மேலும் இன்றும் நாளையும் தபால் நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் மாற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. விமான டிக்கெட், ரயில் டிக்கெட் வாங்குவதற்கும் இன்றும் நாளையும் ரூ. 500, 1000 நோட்டுக்களை பயன்படுத்தலாம்.
பெட்ரோல் பங்குகளிலும், சுங்கச்சாவடிகளிலும் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வாங்க மறுக்கப்படுவதால், மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. சென்னையில் பல இடங்களில் நகை கடைகளில் விடிய விடிய விற்பனை நடைபெற்றுள்ளது. பல இடங்களில் சுங்கசாவடிகளில் சில்லரை கிடைக்காததால் இலவசமாக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.