மும்பை : ரூ.500, 1000 நோட்டுகள் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்ததன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. சென்செக்ஸ் 1600 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. இதனால், ரூ. 7 லட்சம் கோடிக்கு மேல் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேசமயம் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1,456 உயர்ந்துள்ளது.
கடும் வீழ்ச்சி :
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி பின்னடைவை சந்தித்து வருவதாலும், இந்தியாவில் ரூ.500, 1000 நோட்டுக்களுக்கு அதிரடியாக வாபஸ் பெறப்பட்டதாலும் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக வீழச்சி அடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1600 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 8100 புள்ளிகளுக்கு கீழும் சரிந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (நவம்பர் 9 காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 1584.19 புள்ளிகள் சரிந்து 26006.95 புள்ளிகளாகவும், நிப்டி 474 புள்ளிகள் சரிந்து 8069.55 புள்ளிகளாகவும் உள்ளன. வங்கிகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் அதிக அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளன. பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியின் காரணமாக சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பும் சரிவுடன் காணப்படுகிறது. கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் காரணமாக ஆசிய பங்குச்சந்தைகளும் சரிந்துள்ளன.
தங்கம் விலை விர்ர்ர் :
தங்கம் விலை இன்று(நவ., 9ம் தேதி) அதிரடியாக சவரனுக்கு ரூ.1,456 அதிகரித்திருக்கிறது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,060-க்கும் சவரனுக்கு ரூ.1,456 உயர்ந்து ரூ.24,480-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை 880 உயர்ந்து ரூ.31,660-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.48.10-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.910 உயர்ந்து ரூ.44,960-க்கும் விற்பனையாகிறது.
ஏன் இந்த விலை ஏற்றம் :
கறுப்புப் பணத்தை ஒடுக்கும் வகையிலும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஒழிக்கும் வகையிலும் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இதன் எதிரொலியாக பணம் வைத்திருக்கும் பலர் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.