புதுடில்லி:எல்லையில், பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாதிகளும் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பு நிலவரம் குறித்து, முப்படை தளபதிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் யூரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்களை, நம் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி அழித்தது.
இந்த தாக்குதலுக்குப் பின், இந்திய - பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. பாக்., ராணுவம் தொடர்ந்து, எல்லைக்கு அப்பால் இருந்து குண்டுகளை வீசியும், துப்பாக்கி யால் சுட்டும் தாக்கி வருகிறது. அதேபோல், பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன், பயங்கரவாதிகள், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்று வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், பாகிஸ் தான் ராணுவம், 60க்கு மேற்பட்ட முறை, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி யுள்ளது. இதில்,15 பேர் பலியாகி உள்ள னர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலுக் கும், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுரு வல் முயற்சிக்கும், நம் ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள, 175 பள்ளிகளை மூடவும், மக்களை வெளி யேற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், எல் லையில் நடக்கும் சம்பவங்கள், பாதுகாப்பு அம்சங் கள், முப்படைகளின் தயார் நிலை உள்ளிட்டவை குறித்து, முப்படைகளின் தளபதிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் உடனிருந்தார்.
இது வழக்கமான சந்திப்பு தான் என்று, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், பாகிஸ்தானின் அத்து மீறலை தடுப்பதற்கும், எல்லையில் வாலாட்டி வரும் அந்த நாட்டு ராணுவத்துக்கு பாடம் புகட்டவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்திய துாதருக்கு சம்மன்:
எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இது குறித்து, பாகிஸ்தானுக்கான இந்தியத துாதரகத்தின் துணைத் துாதர், ஜே.பி.சிங் குக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்தியாவின் நடவடிக்கையை கண்டிப்பதாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் தெற்காசியாவுக்கான டைரக்டர் ஜெனரல் மெகமத் பைசல்,அவரிடம் நேரில் கூறியுள்ளார்.கடந்த, இரண்டு வாரங்களில், ஐந்தாவது முறையாக, இந்திய துாதருக்கு, பாகிஸ்தான் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
3 இந்திய அதிகாரிகள்நாடு திருப்புகின்றனர்:
உளவு பார்த்ததாக, இந்தியாவுக்கான பாகிஸ்தான் துாதரக ஊழியர் மெஹ்மூத் அக்தர், சமீபத்தில் பிடிபட்டான். இதற்கு பழிவாங்கும் வகையில், உளவு பார்த்ததாக, பாகிஸ்தானுக் கான இந்திய துாதரக அதிகாரிகள் எட்டு பேர் மீது, பாகிஸ்தான் குற்றஞ்
சாட்டியது. அந்த அதிகாரிகளின் பெயர்களை யும் வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கான இந்திய துாதரகத்தில் பணியாற்றும், மூத்த அதிகாரிகள் அனுராக் சிங், விஜய் குமார் வர்மா, மாதவன் நந்தகுமார் ஆகியோர், நேற்று பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டனர்.
துபாய் வழியாக அவர்கள், நாடு திரும்ப உள்ள தாக, வெளியுறவு துறை தகவல் தெரிவிக்கி றது. மற்ற,ஐந்து அதிகாரிகளும், வாகா எல்லை மூலமாக, சாலை வழியாக நாடு திரும்புவதாக வும்,தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடரும் அத்துமீறல்:
எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில், பாகிஸ் தான் ராணுவம் அத்துமீறி நடத்தும் தாக்குதல் தொடர்கிறது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டம் நவ்ஷேரா பகுதியில் உள்ள, நமது ராணுவத்தின் நிலைகளை குறிவைத்து, பாகிஸ் தான் ராணுவம், நேற்று தாக்குதல் நடத்தியது. இதில், இந்திய வீரர் ஒருவர் இறந்தார்; அதைத் தொடர்ந்து, நம் வீரர்கள், எதிர் தாக்குதல் நடத்தினர்.