நியூயார்க் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டொனால்ட் டிரம்பிற்கு ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கீ மூன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்க அதிபராக இருந்து வரும் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், புதிய அதிபரை தேர்ந்து எடுப்பதற்காக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டனும் (வயது 69), குடியரசு கட்சியின் சார்பில் தொழில் அதிபரான டொனால்டு டிரம்பும் (70) போட்டியிட்டனர்.
இந்நிலையில் வெளியான முடிவுகளின்படி, மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் டிரம்புக்கு 276 தேர்தல் சபை வாக்குகளும், ஹிலாரிக்கு 218 தேர்தல் சபை வாக்குகளும் கிடைத்தன. மாகாணங்களைப் பொறுத்தவரையில் டிரம்ப் 29 மாகாணங்களில் வெற்றி பெற்றார். ஹிலாரி 18 மாகாணங்களில் வெற்றி பெற்றார்.
அடுத்த ஆண்டு (2017) ஜனவரி மாதம் 6-ந் தேதி நடைபெறும் அமெரிக்க பார்லி., கூட்டு கூட்டத்தில் அமெரிக்க அதிபராக டிரம்ப் முறைப்படி அறிவிக்கப்படுவார். அப்போது துணை அதிபரும் அறிவிக்கப்படுவார். அதன்பிறகு ஜனவரி 20-ந் தேதி டிரம்ப், அதிபராக பதவி ஏற்றுக்கொள்வார்.
பார்லி., வளாகத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும். அதுவரை தற்போதைய அதிபர் ஒபாமா பதவியில் தொடருவார். டிரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபர் ஆவார். 70 வயதாகும் டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே மிகவும் வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.நாட்டின் முன்னேற்றத்துக்கு: இந்நிலையில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இவ்வாறு பான் கி மூனின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.