அமெரிக்காவில், தமிழக வம்சாவளி இளைஞரான கிருபா புஷ்பராஜுக்கு, 'சிறந்த வழக்கறிஞர்' விருது வழங்கப்பட்டது.
தமிழக வம்சாவளியைச் சேர்ந்த, கிருபா புஷ்பராஜ், தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனின் பேரனும், நா.புஷ்பராஜ் - மணிமேகலை தம்பதியின் மகனுமாவார். கோவையில் பி.இ., பட்டம் பெற்ற இவர், 2002ல் அமெரிக்கா சென்று, கணினி, மன்னியல் பிரிவில், எம்.எஸ்., பட்டமும், சட்டத்தில், முனைவர் பட்டமும் பெற்று, காப்புரிமை, அறிவுசார்சொத்துரிமை வழக்கறிஞராக உள்ளார்.
கலிபோர்னியா மாகாணத்தில், 'ஸ்கொயர்' எனும் நிறுவனத்தில் சட்டத் துறை இயக்குனராகவும், ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில், பகுதி நேர சட்ட ேபராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்.கலிபோர்னியாவில், 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில், 'சூப்பர் லாயர் ரைசிங் ஸ்டார்' எனும் விருதை, கிருபா புஷ்பராஜ் பெற்றுள்ளார்.
தற்போது, 2016ம் ஆண்டுக்கான, 40 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான, 'பெஸ்ட் லாயர்' விருது, 'ஏசியன் பசிபிக் அமெரிக்கன் பார் அசோசியேஷன்' வழக்கறிஞர் சங்கத்தால், இவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா சான்டியாகோ நகரில், நவ., 3ல் நடந்த விழாவில், கிருபா புஷ்பராஜுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவில், இவ்விருதை பெறும் முதல் தமிழக இளைஞர் இவர்.