புதுடில்லி: சென்னை, மும்பை உட்பட, நாடு முழுவதும் உள்ள, 28 முக்கிய ரயில் நிலையங்கள், ராமாயணம், முகலாய பேரரசர் அக்பர் உள்ளிட்ட, வரலாற்று படைப்புகளை குறிக்கும் வகையில், மாற்றி அமைக்கப்பட உள்ளன.ரயில்வே நடவடிக்கை:
பல்வேறு புதிய வசதிகளுடன், ரயில் நிலையங்களின் புறத்தோற்றத்தையும் மேம்படுத்த, ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, 400 ரயில் நிலையங்களை நவீன மயமாக்கும் திட்டம் நடைமுறைபடுத்தப் பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 14 ரயில்வே கோட்டங்களில் உள்ள, 28 ரயில் நிலையங்களில், வரலாற்று படைப்புகளை விளக்கும் வகையில், வர்ணம் பூசப்பட உள்ளது.
வரலாற்று படைப்புகள்:
ராமாயணம், மொகலாய பேரரசர் அக்பர் உள்ளிட்ட வரலாற்று படைப்புகள் குறித்த படங்கள் வரையப்பட உள்ளன. அந்தந்த பகுதியின் வரலாற்றின் அடிப்படையில் இந்த படங்களை வரைய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, உள்ளூர் மக்கள் அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.





