வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக நியூ ஃபாக்ஸ் நியூஸ் சானல் தேர்தலுக்கு கருத்துக் கணிப்பு நடத்தியது. அதன் முடிவை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹிலாரி கிளிண்டன் 48 சதவீதம் ஓட்டுகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் 44 சதவீதம் ஓட்டுகள் பெற்று பின்தங்கி உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவ.,8 ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர். அமெரிக்கா மட்டுமல்லாது உலகமே அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 1 நாள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த முடிவு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.