ஆமதாபாத்: டில்லியில் பெரும் பிரச்னையாக இருந்து வரும் காற்று மாசுபாடு தற்போது ஆமதாபாத் நகரிலும் நிலவி வருகிறது.
காற்று மாசுபாடு டில்லியில் இருப்பதைப் போல மிக அதிக அளவில் இல்லாவிட்டாலும் இந்தியாவில் காற்று மாசுபாட்டினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள 5 முக்கிய நகரங்களில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத்தும் இடம் பிடித்துள்ளது.
காற்று மாசுபாட்டிற்கு காரணம்:
வாகனங்களில் இருந்து வௌியேறும் சல்பர் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்ஸைடுகள் காற்று மாசு அடைவதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. ஒரு கனமீட்டர் காற்றில் 60 மைக்ரோகிராம் மாசு மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும். ஆனால் தீபாவளி தினத்தன்று மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியதில் நகரில் பல முக்கியமான இடங்களில் அது அனுமதிக்கப்பட்ட அளவை விட 677 மைக்ரோகிரம் ஆனதாக மாநகர் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் வாகனப் போக்குவரத்தில் கடுமையான விதிகளை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் அகமதாபாத் போன்ற நகரங்கள் இருப்பதாக மேலும் தெரிவித்தார்.
காற்று மாசுபாட்டினால் ஏற்படும் பிரச்னைகள்:
காற்று மாசுபாட்டினால் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் அதிகம் பாதிப்படைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டு சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் இருதய கோளாறு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.