ஐதராபாத்:அரசியல் கட்சிகள் ரொக்கப் பணமாக நன்கொடை பெறுவதற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தலைமையிலான "ஊழலுக்கு எதிரான இந்தியா' இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் சந்தோஷ் ஹெக்டே. இந்நிலையில், புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை அவர் வரவேற்றுள்ளார்.
மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு:
இதுதொடர்பாக, ஐதராபாதில் சந்தோஷ் ஹெக்டே வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது:மத்திய அரசின் இந்த முடிவை முழுவதுமாக ஆதரிக்கிறேன். அரசின் ஒவ்வொரு முடிவும் மக்களுக்கு சிறிது காலம் சிரமங்களை கொடுக்கலாம். ஆனால், கருப்புப் பணம் புழக்கத்தில் இருப்பதை அனுமதிக்க முடியாது.
ரூபாய் நோட்டுகளுக்குத் தடை விதித்ததைப் போலவே, வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்பதும் முக்கியமாகும். எனவே, பா.ஜ.க.,வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்ததைப் போல், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மத்திய அரசு மீட்க வேண்டும். மேலும், அரசியல் கட்சிகள் ரொக்கப் பணமாக நன்கொடை பெறுவதற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பவர்கள், பான் எண் அல்லது ஆதார் எண் அளிப்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும் என்றார்.