சென்னை : பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வசதியாக, தபால் நிலையங்களும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வசதிக்காக :
மத்திய அரசால் வாபஸ் பெறப்பட்டது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காகவும், டெபாசிட் செய்வதற்காகவும் பொதுமக்கள் வங்கிகளில் குவிகின்றனர். பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால், வங்கிகளுக்கு வருவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்களின் வசதிக்காக வங்கிகள் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வங்கிகளைத் தொடர்ந்து, தபால் நிலையங்களும் சனி, ஞாயிறு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால் நிலையங்களும் செயல்படும் :
ரூபாய் நோட்டுக்களை மாற்றும் பணியில் தபால் நிலையங்களின் செயல்பாடு குறித்து தமிழ்நாடு தலைமை தபால் அதிகாரி கூறுகையில், “பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தபால் நிலையங்கள் செயல்படும். தலைமை மற்றும் துணை தபால் நிலையங்களில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம். இந்த இரு நாட்களிலும் சேமிப்பு கவுண்டர்களும் திறந்திருக்கும்” என்றார்.