புதுடில்லி:காங்கிரஸ்
துணைத்தலைவர் ராகுல், டில்லியில் பாராளுமன்ற பகுதியில் அமைந்துள்ள ஸ்டேட் வங்கிக் கிளைக்கு ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை மாற்ற வந்ததை போட்டோ எடுத்துக்கொள்ள ஒரு வாய்ப்பு என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “வாரிசு அரசியலில் வந்தவர்கள், தாங்கள்தான் ஆளப்பிறந்தவர்கள் என்ற உணர்வில் உள்ளவர்கள். கட்சியின் தலைமைப்பதவிக்கு வருவதற்கு அவர் வரிசையில் நின்றது கிடையாது. மிகுந்த அனுபவம், திறன் வாய்ந்தவர்களையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு, மேலே வந்தார். அவர் வரிசையில் வந்திருந்தால், தகுதியானவர்கள் மேலே வந்திருப்பார்கள். கட்சி நன்றாக வந்திருக்கும்” என கூறி உள்ளார்.
அத்துடன், “வங்கிக்கு வந்து வரிசையில் நின்று அதை அவர் காட்சிப்படுத்த நினைத்தார். படம் எடுத்துக்கொள்வதற்கான பெரிய வாய்ப்பாக கருதிக்கொண்டார். ஆனால் அவரது படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு, முரணாக அமைந்து விட்டது. நமது பிரதமரின் திட்டத்துக்கு வெற்றியாக அது மாறிவிட்டது” என்றும் கூறி இருக்கிறார்