பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அங்குள்ள ஆயுதங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை வெளியிட்ட, தனியார் ஹிந்தி, 'டிவி'யின், ஒரு நாள் ஒளிபரப்புக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது.
தகவல்கள் வெளியீடு:
பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இந்த ஆண்டு துவக்கத்தில், பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை விமான தளத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது, 'என்.டி.டி.வி., இந்தியா' என்ற ஹிந்தி, 'டிவி' சேனலில், பதன்கோட் விமானப்படை தளத்தில், பயங்கரவாதிகள் எங்கு பதுங்கியுள்ளனர்; எங்கு ஆயுதங்கள், போர் விமானங்கள் வைக்கப்பட்டுள்ளன உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்பட்டன.
ஆய்வு:
இது குறித்து, செய்தி மற்றும் ஒலிபரப்பு துறையின், பல்வேறு அமைச்சகங்கள் அடங்கிய குழு ஆய்வு செய்தது. அதைத் தொடர்ந்து, அந்த, 'டிவி' சேனலுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு, அதன் பதிலும் பெறப்பட்டது.
ஓரு நாள் தடை:
இது குறித்து, மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கை: பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும்போது, இதுபோன்ற பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வெளியிடுவது, நாட்டின் பாதுகாப்புக்கு பாதகத்தை ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது. புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டங்களின்படி, இந்த குற்றத்துக்கு, 30 நாட்களுக்கு ஒளிபரப்பு செய்ய தடை விதிக்கலாம்; இருப்பினும், இதுதான் முதல் புகார் என்பதால், வரும், 9ம் தேதி ஒருநாள் முழுவதும், இந்த, 'டிவி'யின் ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Friday, 4 November 2016
Home »
» ஹிந்தி 'டிவி' ஒளிபரப்புக்கு ஒரு நாள் தடை விதிப்பு