சென்னை: சென்னை, தரமணியில் மழை நீர் கால்வாயில் மூழ்கி சிறுவன் பலியான வழக்கில் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை, தரமணியில் மூன்று ஆண்டுகளுக்கு முன், மழை நீர்கால்வாயில் மூழ்கி, தினேஷ் என்ற சிறுவன் பலியானான். இது குறித்து, சமூக ஆர்வலர், ‛டிராபிக்' ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, சென்னை மாநகராட்சி ஆணையர், காவல் துறை துணை ஆணையர் ஆஜராகினர். மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததற்காக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். ஜன.,30க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.