கோடா:''மத்திய அரசு, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிப்பதற்கு முன்பே,அது பற்றிய விபரம், அதானி, அம்பானி போன்ற தொழிலதிபர்களுக்கு தெரிந்து விட்டது,'' என, ராஜஸ்தானை சேர்ந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., கூறியுள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பே, அதுகுறித்த தகவல், சிலருக்கு கசிந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி
வருகின்றன; இதை, மத்திய அரசு மறுத்தது.
இந்நிலையில், முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் ராஜஸ் தான் மாநிலத்தின், ஆளும் கட்சி, எம்.எல்.ஏ.,வான, பவானிசிங் ராஜவட் கூறியதாவது:
பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்தது நல்ல முடிவு தான்; இதனால், கறுப்பு பணம் குறையும். ஆனால், இதை படிப்படியாக செய்திருக்க வேண்டும். அப்படி செய்தி ருந்தால்,வங்கிகளிலும், ஏ.டி.எம்.,களிலும், இவ்வளவு கூட்டம் திரண்டிருக்காது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவிப் பதற்கு முன்பே, அதுகுறித்த தகவல்,அதானி, அம்பானி போன்ற தொழிலதிபர்களுக்கு தெரியும்.
புதிதாக அச்சடிக்கப்பட்டுள்ள, 2,000 ரூபாய் நோட்டு, சாதாரண காகிதத்தில் அச்சடித்தது போல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.பவானி சிங், இவ்வாறு கூறியது, வட மாநில, 'டிவி' சேனல்களில்
ஒளிபரப்பான தால், பா.ஜ., வட்டாரத்தில், பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், பவானி சிங் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்; அவர் கூறுகையில், ''நிருபர்களுடன் சாதாரணமாகத் தான், பேசி னேன். ரூபாய் நோட்டுகள் பற்றி எதுவும் கூறவில்லை. ரூபாய் நோட்டு கிடைக்காத தால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றுதான் கூறினேன்,'' என்றார்.
English Summary:
The federal government, 500 - 1,000 banknotes as valid, declare before the detail of it, Adani, industrialists like Ambani came to know that, '' as in Rajasthan, BJP - MLA, said, great controversy off.