புதுடில்லி:தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில், கட்டணமின்றி வாகனங் கள் செல்ல அளிக்கப்பட்ட அவகாசம், 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லா தென அறிவிக்கப்பட்ட பின்,தேசிய நெடுஞ் சாலைகளில், வாகனப் போக்குவரத்து சுமுக மாக நடக்க வேண்டும் என்பதால், 11ம் தேதி நள்ளிரவு வரை, சுங்கச் சாவடிகளில் கட்டண மின்றி வாகனங்கள் செல்லலாம் என, மத்திய அரசு அறிவித்தது.
பின், இந்த அவகாசம், 14 வரையும், அதன் பின்னர், 18வரையும் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. இந்நிலை யில்,மக்களிடையே போதிய அளவு பணப்புழக்கம் ஏற்படாததால், சுங்கச்சாவடிகளில், கட்டணமின்றி வாகனங்கள் செல்வதற்கான அவகா சம், 24 நள்ளிரவு வரை,மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
'வாபஸ் பெறமாட்டோம்!'
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:
செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டு களுக்கு பதில், வேறு நோட்டுகளைஅளிக்க, தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.
இதற்கென போதிய பணம் கையிருப்பு உள்ளது. பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாத தாக அறிவிக்கப்பட்ட திட்டத்தை அரசு ஒருபோதும்
வாபஸ் பெறாது. இவ்விஷயத்தில், ஒரு சில மாநிலங்களின் முதல்வர்கள் தேவையற்ற பீதியை கிளப்பி வருகின்றனர்.
வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.,களில் பணம் பெறு வதில், ஒரு சில இடங்களில் சிரமம் உள்ளது; இதற்கு வருந்துகிறோம். புதிய, 1,000 ரூபாய் நோட்டை அச்சிடும் திட்டம் எதுவும், தற்போ தைக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
The tolls on national highways, the charge time for the cars that go through the eye, has been extended until 24 th.