புதுடில்லி:பா.ஜ.,விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட, கீர்த்தி ஆசாத்தின் மனைவி பூனம் ஆசாத், ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளார்.
பீஹாரைச் சேர்ந்த, முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத், எம்.பி.,யாக உள்ளார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தியதால், பா.ஜ.,விலிருந்து, கீர்த்தி ஆசாத், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கீர்த்தி ஆசாத்தின் மனைவி பூனம் ஆசாத், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று சந்தித்து, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். கட்சிக்கு அவரை வரவேற்ற, துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, ''மக்களின் பிரச்னைகளுக்காக போராடி வருபவர், பூனம் ஆசாத்' என்றார். 'பஞ்சாப் சட்டசபை தேர்தலில், பூனம் ஆசாத், முக்கிய பங்காற்றுவார்,'' என, ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறினார்.
இதன்பின், பூனம் ஆசாத் கூறியதாவது:ஆம் ஆத்மி கட்சியில், இளைஞர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. பா.ஜ.,வில் அருண் ஜெட்லியால், மோசமாக நடத்தப்பட்டதால், அக்கட்சியில் இருந்து விலகினேன். அவரது ஊழலை அம்பலப்படுத்தியதால், என் கணவர் கீர்த்தி ஆசாத், பா.ஜ.,வில் இருந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பா.ஜ., இரட்டை வேடம் போடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.