புதுடில்லி: கெஜ்ரிவால், டில்லி முதல்வரான பிறகு அவரது அலுவலகத்தில் இருந்ததை விட மத்திய அரசுக்கு எதிராக போராட்டம், ஆளுனருக்கு எதிராக போராட்டம், ஓட்டு வங்கி அரசியலுக்காக இறந்தவர்களின் வீட்டிற்கு செல்வது ஆகியவற்றிலேயே அதிக நேரத்தை செலவிட்டு வந்தார். அவர் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை ஏறக்குறைய மக்கள் மறந்தே விட்டனர். தற்போது மத்திய அரசை குறைகூறுவது, பிரதமரை விமர்சிப்பது உள்ளிட்டவைகளையே கெஜ்ரிவால் முழுநேர பணியாக செய்து வருகிறார்.
விமர்சனம் ஏன்:
ஊழலுக்கு எதிராக போராடுவதாக இயக்கத்தை துவங்கி, அதை வைத்து தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்த கெஜ்ரிவால், தற்போது கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெற்ற நடவடிக்கையை எதிர்த்து, கடுமையாக விமர்சித்து வருகிறார். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எத்தனையோ சிரமங்களை சந்தித்தாலும் நாட்டின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட நடவடிக்கை என மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு 75 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக பத்திரிக்கைகள், மீடியாக்கள் காட்டினாலும் கள நிலவரத்தை ஏற்க மறுத்து, கெஜ்ரிவால் கறுப்பு பணம் பதுக்கியவர்களுக்கு ஆதரவு அளிப்பது போல் பேசி வருகிறார்.கடந்த 6 - 7 மாதங்களாக கெஜ்ரிவால் பஞ்சாப்பில் தீவிர பிரசாரம் செய்து வந்தார். பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளதால் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அங்கு சென்று விடுவார். இதனால் டில்லியில் பல பணிகள் முடங்கி உள்ளன. சின்குன்குனியா, டெங்கு நோய்களால் டில்லி மக்கள் அவதிப்பட்ட போது கூட டில்லிக்கு வராமல் பிரசாரத்தில் பிசியாக இருந்தவர் கெஜ்ரிவால்.
அமைச்சரவை ஆலோசனை இல்லை:
கடந்த 2 மாதங்களாக மிக அரிதாகவே கெஜ்ரிவால் தனது அலுவலகத்திற்கு வருவார். அப்படியே வந்தாலும் 15 - 20 நிமிடங்கள் மட்டுமே இருப்பார். கடந்த பல மாதங்களில் இதுவரை 2-3 முறை மட்டுமே அமைச்சரவை கூட்டப்பட்டுள்ளது. அதுவும் டில்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பது தொடர்பாக பல எதிர்ப்புக்களும், சுப்ரீம் கோர்ட் கண்டனமும் எழுந்ததற்கு பிறகு அமைச்சரவையை கூட்டி கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தி உள்ளார். இதனை அவரது அலுவலகத்தில் பணிபுரிபவர்களே உறுதி செய்துள்ளனர்.டில்லியில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட போது பிரதமர் மற்றும் நிதியமைச்சரின் வீட்டின் முன் கட்சி தொண்டர்களுடன் போராட்டம் நடத்திய கெஜ்ரிவால், தற்போது பண தட்டுப்பாட்டால் மக்கள் கடுமையாக சிரமப்படுவதாக குற்றம்சாட்டும் கெஜ்ரிவால் ஏன் போராட்டம் நடத்தவில்லை? ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பை திரும்ப பெறாவிட்டால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார். அப்படியானால் அதற்கு என்ன அர்த்தம்? ஊழலுக்கு எதிரானவர் என தன்னை சொல்லிக் கொள்ளும் ஒருவர், எதற்காக கறுப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கையை எதிர்க்க வேண்டும்? பிரதமரின் இந்த நடவடிக்கையை கெஜ்ரிவால் எதிர்க்க என்ன காரணம்? பல மாதங்களாக டில்லி பக்கமே வராமல், தொடர்ந்து பஞ்சாப்பில் நடத்தி வந்த பிரசார சுற்றுப்பயணத்தை திடீரென நிறுத்தி விட்டு, நவம்பர் 8 ம் தேதி ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் அறிவித்த பிறகு டில்லியை விட்டு செல்லாமல் முடங்கி இருப்பதற்கு என்ன காரணம்?
ரகசியம்:
இதற்கு பின்னால் மறைந்திருக்கும் ரகசியம் குறித்து உளவுத்துறை முன்னாள் அதிகாரி ஆர்.எஸ்.என்.சிங், பல அதிர்ச்சி தகவல்களை, ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கெஜ்ரிவாலுக்கு வெளிநாட்டு ஏஜன்சிகள் மூலம் ஏராளமான பணம் வருகிறது. இந்திய பொருளாதாரத்தில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. கணக்கில் வராத இந்த பணம், கெஜ்ரிவாலின் என்ஜிஓ.,க்களான பரிவர்த்தன், கபீர் ஆகியோர் நடத்தும் சில அமைப்புக்களின் வங்கி கணக்கிற்கு பல ஆண்டுகளாக மாற்றப்பட்டு வருகிறது. இவர்கள் இந்திய அரசின் வெளிநாட்டு நிதி விதிமுறைகளை மீறி வந்து கொண்டிருக்கிறது. இப்போது கெஜ்ரிவால், இந்த அமைப்புகள் முறையாக பதிவு செய்யப்படாதவை என அறிவித்துள்ளதுடன், அவற்றின் இணையதளங்களையும் திடீரென மூடி உள்ளார் என்றார்.சமீபத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ஆம்ஆத்மி எம்எல்ஏ கர்தர் சிங் தன்வாரின் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.130 கோடிக்கும் அதிகமான பணம், வீட்டில் இருந்து ரூ.1 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிஎன்ன செய்தி வெளியிட்டிருந்தது.
தேர்தலுக்கு சட்ட விரோத பணம்:
சட்ட விரோதமாக வந்த 3000 கோடி பணத்தை அவர் கோவா மற்றும் பஞ்சாப் தேர்தலுக்கு பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இவற்றை மனதில் வைத்து தான் பிரதமரின் நடவடிக்கையை கெஜ்ரிவால் எதிர்க்கிறாரா? பல மாதங்களுக்கு பிறகு டில்லி சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கெஜ்ரிவால் கூட்ட காரணம் என்ன? அதில் டில்லி பிரச்னை பற்றி எதுவும் பேசப்படவில்லை. அதற்கு பதிலாக 2012ல் மோடி லஞ்சம் வாங்கியதாக ஒரு பொய்யான போட்டோவை வெளியிட்டார். கெஜ்ரிவால் தனது குரு என அறிவித்த அன்னா ஹசாரே, பிரதமரின் இந்த நடவடிக்கையை புதிய புரட்சி என பாராட்டியதுடன், இதற்கு 100 சதவீதம் ஆதரவை தெரிவித்துள்ளார். ஹசாரேவை ஆதரிக்கும் கெஜ்ரிவால் எதற்காக கறுப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கையை எதிர்க்கிறார்? எதற்காக 5 ஆண்டுகளுக்கு முன் ஊழலை ஒழிக்க வேண்டும் என ஜந்தர் மந்தரிலும், ராம் லீலா மைதானத்திலும் உண்ணாவிரதம் இருப்பதாக அமர்ந்தார்? நாட்டின் உண்மையான ஆபத்து வெளியில் இருப்பவர்களால் அல்ல. இந்திய குடிமகன்கள் என கூறிக் கொண்டு, கறுப்பு பணத்திற்கு ஆதரவாக, பயங்கரவாதிகள், குற்றவாளிகள், சமூக விரோதிகளுக்கு உதவிக் கொண்டு இருப்பவர்கள் தான். நாட்டிற்குள்ளாகவே இருந்து கொண்டு நாட்டை அழிப்பவர்கள் தான் இவர்கள்.
English Summary:
Arvind Kejriwal, Delhi Chief Minister after his office than in the struggle against the central government, the struggle against the governor, vote bank politics to spend more time along with going to the house of the dead. People have forgotten about the promises he made during the election. Currently the federal government to criticize, criticize the prime minister Kejriwal is making a full-time mission.