உத்தரப்பிரதேச மாநிலம், பதாவுன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்பால். 65 வயதான இவர் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஹரிஷ், விபின் சிங் என இரண்டு மகன்கள். மனைவி மரணத்துக்குப் பிறகு இளைய மகன் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று சந்தைக்குச் சென்று திரும்பும்போது அடையாளம் தெரியாத நபர்களால் சத்பால் சுட்டுக் கொல்லப்பட்டார். உடனே சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை உடலை மீட்டு, இந்தக் கொலை தொடர்பாக விசாரிக்கத் தொடங்கியது.தந்தையை சுட்டுக் கொன்ற மகன்
விசாரணையில் பல தகவல்கள் வெளியாகின. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீஸார், ``சுட்டுக் கொல்லப்பட்ட சத்பாலுக்கு யாருடனும் பகை இருக்கிறதா என விசாரித்ததில் நெருங்கிய உறவுகள் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்தது. அப்போதுதான் இளையமகன் விபினுக்கும் சத்பாலுக்கும் இடையே பிரச்னை நடந்ததும்... அதைத் தொடர்ந்து சமீபகாலமாக மூத்த மகன் ஹரிஷ் வீட்டில் சத்யபால் வசித்து வந்ததும் தெரியவந்தது. இதற்கு முன்பு, சத்யபால் தன் இளைய மகன் விபின் சிங், மருமகள் பூஜாஆகியோருக்கு ஒரு டிராக்டர் மற்றும் ஒரு கார் வாங்கிக் கொடுத்து, பால் பண்ணை வைக்கவும் உதவியிருக்கிறார்.காவல்துறை
அதிலிருந்து வரும் வருமானத்தில் குடும்ப கஷ்டத்தில் இருக்கும் மூத்த மகன் ஹரிஷுக்கு உதவுமாறு கேட்டிருக்கிறார். இதற்கு மறுப்பு தெரிவித்த இளைய மகன் - மருமகளால் தகராறு ஏற்பட்டிருக்கிறது. மேலும், இந்த விவகாரத்தால் அங்கிருந்து கிளம்பி, மூத்த மகனின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அதன் பிறகே கொலை நடந்திருக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட இருவரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" எனத் தெரிவித்தனர்.தீபாவளியைக் கொண்டாட வந்தவர் கழுத்தறுத்துக் கொலை; பழிக்குப்பழியாக செய்ததாக இளைஞர் போலீஸில் சரண்!
http://dlvr.it/Sbk5Mj
Wednesday 26 October 2022
Home »
» குடும்பத் தகராறில் சுட்டுக் கொல்லப்பட்ட தந்தை; மனைவியுடன் கைதான மகன்! - என்ன நடந்தது?