கேரள அரசு நவம்பர் 1 -ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் டிஜிட்டல் ரீ சர்வே எடுக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் பெரிய அளவிற்கு தமிழக வன நிலங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நில எல்லை முல்லை பெரியாறு அணை- நீர்மட்ட கால அட்டவணையை ரத்து செய்ய வேண்டும்!
எனவே திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள நெய்யாற்றின்கரை, கட்டக்கடை,நெடுமங்காடு ஆகிய 3 தாலுகாக்கள், கொல்லம் மாவட்டத்தில் உள்ள புனலூர் தாலுக்கா, பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள கோணி தாலுகா, இடுக்கி மாவட்டத்தில் உள்ள பீர்மேடு, உடுமஞ்சோலை, தேவிகுளம் ஆகிய 3 தாலுகாக்கள், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சித்தூர், பாலக்காடு, மன்னார்க்காடு ஆகிய 3 தாலுகாக்கள், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் தாலுக்கா, வயநாடு மாவட்டத்தில் உள்ள வைத்ரி, மானந்தவாடி மற்றும் சுல்தான் பத்தேரி ஆகிய 3 தாலுகாக்கள் என தமிழக எல்லையோரம் உள்ள கேரளாவில் உள்ள 15 தாலுகாக்களில் டிஜிட்டல் ரீ சர்வேயை நிறுத்தி வைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், முல்லை பெரியாறு அணையில் 152 அடி நீர் மட்டம் தேக்க வேண்டும். முல்லை பெரியாறு அணைக்கு எதிராக விசம பிரசாரத்தை பரப்பும் நோக்கில் ஆவணப்படம் வெளியிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளாவில் தமிழக எல்லை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் முழுமையாக எல்லை அளவீடு செய்யப்படாமல் டிஜிட்டல் ரீ சர்வே செய்வதை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் தமிழக-கேரள எல்லையில் உள்ள குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய பகுதிகளில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். அன்வர் பாலசிங்கம்``புது அணைக்குத் தடை ஆணை வாங்கியே தீருவோம்!" - திரளும் முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள்
இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கத்திடம் பேசினோம். அவர், ``கடந்த 1956 மொழிவழி பிரிவினையின் போது, 1400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கேரளாவிடம் தமிழகம் இழந்திருந்திருக்கிறோம். இந்த டிஜிட்டல் ரீ சர்வே முறையால், மிகப்பெரிய அளவிலான தமிழக நிலங்களை இழக்கும் அபாயம் இருக்கிறது. எனவே முறையான வழிமுறைகளை பின்பற்றி, தகுந்த அதிகாரிகள் குழுவை கேரளாவிற்கு அனுப்பி, தமிழக கேரள எல்லையோர 15 தாலுகாக்களில், டிஜிட்டல் ரீ சர்வே முறையை நிறுத்துவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மொழிவழி பிரிவினையால் தமிழகம் இழந்த பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு, உடுமஞ்சோலை ஆகிய 3 தாலுகாக்கள் கேரள மாநில வரி வருவாயில் 12 விழுக்காடு வழங்கிக்கொண்டிருக்கிறது. வனவளம் மிகுந்த நெய்யாற்றின்கரை,நெடுமங்காடு, செங்கோட்டை தாலுகாவின் மேற்கு பகுதி எல்லாம் இன்றைக்கு கேரள மாநிலத்திற்கான அட்சய பாத்திரங்களாகும். முல்லை பெரியாறுரூல்கர்வ் முறைப்படி முல்லை பெரியாறு நீர் திறப்பு... தமிழக விவசாயிகள் எதிர்ப்பு!
சர்வே ஆஃப் இந்தியாவின் மேற்பார்வையில் தான் டிஜிட்டல் ரீ சர்வே நடத்தப்படுகிறது என கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் கூறுவதில் உண்மை தன்மை இருக்கிறதா எனத் தெரியவில்லை. தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையிலான 822 கிலோ மீட்டர் தூரம் முறையாக இன்னமும் அளவீடு செய்யாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் நிலையில், எந்த அடிப்படையில் கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களிலும் மறு அளவீடு செய்ய முடியும்.
கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 கிராமங்களில், குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டத்தின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். கூடுதலாக நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் தனியாக வரைபடங்களின் மூலம் வகைப்படுத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அண்டை மாநிலத்தோடு எல்லையை அளவீடு செய்வதில் மட்டும் கேரள அரசு உடன்படவில்லை. கடந்த 1956 நவம்பர் 1 இல் நவீன கேரளத்தை உருவாக்கினார்கள். அதே நவம்பர் 1 ஆம் தேதியில் டிஜிட்டல் ரீ சர்வேயை தொடங்குகிறார்கள். கிராம பதிவுகள் முடிந்ததும், நில அளவை ஆவணங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிலப்பரப்பின் விரிவான ஆவணத்தின் உதவியுடன் தொகுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.சர்வேமுல்லை பெரியாறு விவகாரம்: புதிய அணைக்கு அச்சாரம் போடும் கேரளா; தடுப்பாரா ஸ்டாலின்?
தமிழக முதல்வரோடு இணக்கமாக இருக்கும் கேரள முதல்வர் இந்த நேரத்தில் இதுபோன்ற மோசடிகளை அரங்கேற்றிக் கொள்ளலாம் என நினைக்கிறார். முல்லைப் பெரியாறு அணையில், ஐந்து மாவட்ட மக்களுக்கு எதிராக செய்த துரோகத்தை, இன்று டிஜிட்டல் ரீ சர்வே என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள 9 மாவட்ட மக்களுக்கு எதிராக செய்கிறார்கள். எனவே தான் நம்பர் 1 -ம் தேதி தமிழக கேரள எல்லையில் முற்றுகை போராட்டத்தை நடத்த உள்ளோம்" என்றார்.
http://dlvr.it/SbrGcz
Friday 28 October 2022
Home »
» தமிழக வனப்பகுதி பறிபோகும் அபாயம்; கேரளாவின் டிஜிட்டல் ரீ சர்வேயை தடுக்குமா தமிழக அரசு?