உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவிலுள்ள எட்மத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் உஸ்மான். இவருடைய மகளுக்குக் கடந்த புதன்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த உறவினர்கள், நண்பர்களுக்கு ரசகுல்லா பரிமாறப்பட்டதாகத் தெரிகிறது. அப்போது, ஒருசிலர் தங்களுக்கு ரசகுல்லா வைக்கப்படவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இதையடுத்து, மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது திருமணத்தில் கலந்துகொள்ள வந்திருந்த சிலர் சண்டையில் ஈடுபட்டிருக்கின்றனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒருவரையொருவர் கத்தியால் குத்திக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் சன்னி என்பவர் படுகாயமடைந்தார். அதையடுத்து, உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மரணம்
இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் வட்ட அதிகாரி சையத் ஆரிப் அகமது, ``வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து, இந்தச் சம்பவம் குறித்த விவரங்களை அறிய மக்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் காயமடைந்த ஐந்த்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்" என்றார்.யாருக்குச் சொந்தம் ரசகுல்லா?... இறுதியில் வென்ற ஒடிசா!
http://dlvr.it/Sbv6pV
Saturday 29 October 2022
Home »
» `ரசகுல்லா'வால் வெடித்த வாய்த் தகராறு; கொலையில் முடிந்ததால் துக்க வீடான திருமண வீடு!