மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைதி மற்றும் சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கத்துடன் அந்த மாநிலம் காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. 17,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் மூலம், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அதிகாரியை நியமித்து, பல்வேறு மண்டலங்களின் கூடுதல் டைரக்டர் ஜெனரல்கள், துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் பிற தரவரிசைகளின் அதிகாரிகள் பங்கேற்புடன், சனி - ஞாயிற்றுக்கிழமை இடைப்பட்ட இரவில், சுமார் 9,000 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இது தொடர்பாக வெளியான தகவலில், மாநிலம் முழுவதும் உள்ள குற்றவாளிகள், கைது செய்ய ஆணை பிறத்தும் கைது செய்யப்படாமல் இருந்தவர்கள், குற்றம்சாட்டப்பட்டவர்கள் என மூத்த அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் 9,000 பேர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. காவல்துறை
மேலும், இவர்களில் கைது வாரண்ட் நிலுவையில் உள்ள குற்றவாளிகள் சுமார் 6,000 பேர். ஜாமீனில் வெளிவர முடியாத குற்றவாளிகள் 2,600 பேர். தேடப்படும் குற்றவாளிகள் சுமார் 100 பேர், மற்றும் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் 200 பேர் எனத் தெரியவந்திருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 1,000-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் பின்னனி குறித்த விவரங்களும் கண்காணிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.நீலகிரி: சக பெண் பணியாளர்களுக்குத் தொடர் பாலியல் தொல்லை... எஸ்.பி அலுவலக அமைச்சுப் பணி அலுவலர் கைது
http://dlvr.it/SfCwyn
Monday, 12 December 2022
Home »
» 9,000 பேர் ஒரே இரவில் கைது... மத்தியப் பிரதேச காவல்துறையின் அதிரடி நடவடிக்கை
9,000 பேர் ஒரே இரவில் கைது... மத்தியப் பிரதேச காவல்துறையின் அதிரடி நடவடிக்கை
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!