பிரபஞ்சத்தின் ஓர் அதிசய மற்றும் சுவாரஸ்யமான நிகழ்வொன்று, நேற்று நள்ளிரவு நடைபெற்றுள்ளது. அது இன்றும் நள்ளிரவில் நடக்குமாம்! அப்படி என்ன நிகழ்வு தெரியுமா அது? அதாவது நம் பூமி இருக்கும் சூரிய குடும்பத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கோள்களும், இரவு ஒன்றாக ஒரேநேரத்தில் தெரியும்! ஆம், நீங்கள் வாசித்தது உண்மைதான்… இன்று நம் சூரிய குடும்பத்தின் அனைத்துக்கோள்களும் ஒன்றாக வானில் ஜொலிக்கப்போகின்றன. இது நேற்றும் நள்ளிரவில் வானில் வந்துள்ளது.
இவற்றில் சூரியனில் இருந்து சற்று தொலைவிலுள்ள கோள்களான யுரேனஸ் (Uranus) மற்றும் நெப்ட்யூன் (Neptune) ஆகியவை டெலஸ்கோப் அல்லது பைனாகுலர் மட்டுமே பார்க்க முடிந்தவையாகவும், புதன் (Mercury), வெள்ளி (Venus), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter), சனி (Saturn) ஆகியவற்றை எந்த சாதனத்தின் உதவியுமின்றி வெறும் கண்களால் ஒரேநேரத்தில் பார்க்க முடிந்தவையாகவும் நேற்று இருந்துள்ளன, இன்றும் இருக்கப்போகின்றன!
வானியலாளர் டாக்டர் ஜியான்லுகா மாசி என்பவர், இவற்றில் வெறும் கண்களால் பார்க்க உகந்த 5 கோள்களின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இவர் அவற்றை இத்தாலியின் ரோம் நகரிலுள்ள தன் வீட்டின் மொட்டை மாடியில் வைத்து எடுத்திருக்கிறார்.
Mirabile parata planetaria nel cielo del tramonto. Ultimissimi giorni per approfittarne. Ecco alcune mie fotografie di ieri da Roma. pic.twitter.com/Ryek1rOd6Q
— Gianluca Masi (@masi_gianluca) December 29, 2022
பிற வானியலாளர்கள் சிலர் சாதனங்களின் உதவியுடன் கிடைத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். இவற்றை, Planet Parade அதாவது கோள்களின் அணிவகுப்பு என்கின்றனர் வானியலாளர்கள். தென்மேற்கிலிருந்து கிழக்கு திசையில் வெள்ளி, புதன், சனி, வியாழன், செவ்வாய் என வரிசையாக அவை இருந்துள்ளது.
இவை ஏழு கோள்களும் இன்றும் நள்ளிரவில் (நாளை அதிகாலை 2.30 மணியளவில்) தெரியுமென்று சொல்லப்படுகிறது. (குறிப்பு: யுரேனஸ், நெப்ட்யூன் மட்டும் டெலஸ்கோப் அல்லது பைனாகுலராலேயே பார்க்க முடியும்!)
இதை காண விரும்புவோர், இன்று நள்ளிரவில் வானில் மேற்கு திசையின் அடிப்பகுதியில் இருந்து கவனமாக பாருங்கள். அங்கிருந்து அப்படியே ஒவ்வொரு கோளும் ஒரேநேரத்தில் உங்களுக்கு தெரியும். இதுபோன்ற நிகழ்வுகள் 2 வருடங்களுக்கு ஒருமுறை நிகழுமென ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதுபோன்று எல்லா கோள்களும் அருகருகே ஒன்றாக தெரிகையில், பிற கோள்கள் பற்றி நம்மால் அதிகம் தெரிந்துக்கொள்ள முடியுமென சொல்லப்படுகிறது.
இதில் வானின் வெளிச்சமான பகுதியில் இருப்பதால் புதன் கோளை அவ்வளவு சாதாரணமாக நம்மால் காண இயலாது. சற்று ஒளிபொருந்தியதாக இது இருக்குமென்பதால், ஓரளவு காணலாம்; ஒருவேளை உரிய சாதனங்கள் பயன்படுத்தினால் வெள்ளி கோளுக்கு அருகே புதனை ஒளிவீசும் இடத்தில் காணலாம்! இப்படியே அடுத்தடுத்து கிழக்கு திசையில் அனைத்து கோள்களும் இருக்குமென சொல்லப்பட்டுள்ளது. அதில் வியாழன் கோள்தான் இருப்பதிலேயே உயரமான இடத்தில் நமக்கு தெரியுமாம். தெற்கு பகுதி வானில் இது மிகவும் பிரகாசமாக ஒளிவீசும் என கூறப்பட்டுள்ளது. சனி கோள், தங்கம் போன்ற நிறத்தில் தென்மேற்கு திசையில் தெரியுமென சொல்லப்பட்டுள்ளது. செவ்வாய் கோள் சிவப்பு நிறத்தில் இருக்குமாம்!
http://dlvr.it/Sg9ygK
Saturday 31 December 2022
Home »
» ஒரே நேரத்துல ஏழு கோள்களும் நேர்கோட்டில்! இன்று இரவு நீங்க கூட பாக்கலாம்! எப்படி தெரியுமா?