விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததால், ஜுலை 10-ம் தேதி அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க சார்பில் மாநில விவசாயத் தொழிலாளர் அணியின் செயலாளர் அன்னியூர் சிவா களமிறக்கப்பட்டிருக்கிறார். `இடைத்தேர்தல்கள் நேரம், காலம் மற்றும் பொருள்களை விரயமாக்கும் செயல்’ என்று 13 ஆண்டுகளாக கூறி வந்த பா.ம.க, இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வன்னியர் சங்கத்தின் துணைத் தலைவர் சி.அன்புமணியை வேட்பாளராக அறிவித்திருக்கிறது. அதேபோல மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்திற்குப் பின், இங்கு முதல் தேர்தலைச் சந்திக்கிறது நாம் தமிழர் கட்சி.எடப்பாடி பழனிசாமி
ஆனால் எதிர்பாராத திருப்பமாக, அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க இந்த தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவிக்க, அங்கு மும்முனைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது. தொடர் தோல்விகளால் ஏற்பட்டிருக்கும் மன உளைச்சல் என்றும், பா.ம.க-வுக்கு மறைமுக ஆதரவளித்து தி.மு.க-வுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், 2026-ல் பா.ம.க-வை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சி என்றும், அ.தி.மு.க-வின் தேர்தல் புறக்கணிப்புக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் இது தொடர்பாகப் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ``இந்தத் தேர்தலை அ.தி.மு.க புறக்கணிப்பதற்கு காரணம் இருக்கிறது. இவர்கள் ஈரோடு இடைத்தேர்தலை எப்படி நடத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பணத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி மக்களைப் பட்டிகளில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தினர். எனவே இந்தத் தேர்தலில் என்ன நடக்கும் என்பது தெரிந்ததுதான். அதனால்தான், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம்" என்றார்.
ஆனால், மேற்கூறிய காரணங்களைத் தாண்டி, இன்னொரு முக்கிய காரணமும் இந்த தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புக்குப் பின்னணியில் இருக்கிறது என்கின்றனர், அ.தி.மு.க-வினர். அது குறித்து நம்மிடம் பேசிய அக்கட்சியின் சீனியர் லீடர் ஒருவர், ``2021 சட்டமன்றத் தேர்தலின் படுதோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியிடம், மூத்த தலைவர்களுக்கு மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டது.அதிமுக தலைமை அலுவலகம்
அதன் எதிரொலியாக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவுகளை யார் ஏற்பது என்பதில் எடப்பாடிக்கும், எங்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும் பிரச்னை ஏற்பட்டது. மாவட்டச் செயலாளர்கள்தான் செலவுகளைப் பார்க்க வேண்டும் என்று எடப்பாடி தரப்பும், முதல்வராக இருந்தவர்தான் செலவை ஏற்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் தரப்பும் போட்டிப் போட்டதால்தான், பல தொகுதிகளில் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதுதான் நடந்தது. அது தொடர்பாக ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், `தேர்தல்களில் தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்திப்பது கட்சிக்கு நல்லது கிடையாது. அதனால் அம்மா வழியில் இந்த முறை விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணித்துவிடலாம்’ என்றார் எடப்பாடி.விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ளாத அந்த மாவட்டத்தின் மாஜி அமைச்சர், `இந்த தேர்தலில் நாம் போட்டியிட்டே ஆக வேண்டும்' என்றார். உடனே, `வேட்பாளர் யார் என்பதை மாவட்டச் செயலாளரே கூறட்டும்’ என்றார் எடப்பாடி. அதற்கு, `வேட்பாளர் யார் என்பதை கூறுவதில் பிரச்னை இல்லை. ஆனால் தேர்தல் செலவுகளை யார் பார்ப்பது?’ என்று கேள்வி எழுப்பினார், மாஜி அமைச்சர். அப்போது, `மாவட்டச் செயலாளர்கள்தான் தேர்தல் செலவுகளை பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று கூற, அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார் அந்த மாஜி. தொடர்ந்து, `முதல்வர், பொதுச்செயலாளர் பதவிகளுக்கு மட்டும் நீங்கள். செலவு செய்வதற்கு மட்டும் நாங்களா?’ என்று மற்ற மாவட்டச் செயலாளர்களும் அந்த மாஜி அமைச்சருக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதுதான் நாங்கள் தேர்தலைப் புறக்கணிக்க காரணம்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppbவிக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக - எடப்பாடி கூறும் காரணமென்ன?!
http://dlvr.it/T8NyWN
Monday, 17 June 2024
Home »
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: ரேஸிலிருந்து பின்வாங்கிய அதிமுக - பின்னணி என்ன?!