வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்த லில் வெற்றி பெற்று, புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்டு டிரம்ப், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களுக்கு பயனளிக்கும், 'எச்., 1 - பி' விசாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இவர், அடுத்தாண்டு துவக்கத்தில், அமெரிக்காவின், 45வது அதிபராக பதவியேற்க உள்ளார்.டிரம்பின் செயல் திட்டங்கள் குறித்து, அமெரிக்காவில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களுக்கு பெருமளவில் பயனளிக்கும், எச்., 1 - பி விசா தொடர்பாக, டிரம்ப், பிரசாரத்தின் போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார்.'இந்தியாவில் இருந்து வரும் ஊழியர்களால், அமெரிக்கர்களின் தொழில் வாய்ப்பு பறிக்கப்படுகிறது; எனவே இந்த விசாவுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பேன்' என்றார்; இதற்கு, இந்தியர்கள் மட்டுமின்றி அமெரிக்க தொழில் நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. புதிய அதிபராக பதவியேற்கவுள்ள டிரம்ப், எச்., 1- பி, விசா விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, தெற்காசியா குறித்து ஆய்வு செய்து வரும், 'ஹெரிட்டேஜ் பவுண்டேஷன்' ஆய்வாளர் லிசா கூறியதாவது: இந்தியா - அமெரிக்கா இடையே, சில ஆண்டுகளாக இணக்கமான உறவு நிலவுகிறது. பயங்கரவாத பிரச்னை உள்ளிட்ட விஷயங்களில், புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள டிரம்பின் நடவடிக்கைகள், இந்த உறவுக்கு வலு சேர்க்கும். அதே சமயம், எச்., 1 - பி விசா விஷயத்தில், டிரம்ப் விடாப்பிடியாக உள்ளார்; பதவியேற்ற பின், இதுதொடர்பான அறிவிப்புகளை அவர் வெளியிடலாம். இந்தியர்களை நேரடியாக பாதிக்கும் இந்த பிரச்னை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அவர், அமெரிக்க தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுத்தாலும், இது அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது சந்தேகமே. இவ்வாறு அவர் கூறினார்.
காப்பீட்டில் மாற்றம் : அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில், தற்போதைய அதிபர் ஒபாமா, 'ஒபாமா கேர்' என்ற பெயரில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தினார். ஆனால், 'இது அதிக செலவு பிடிக்கும் திட்டம்' எனக் கூறி, காப்பீட்டு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 'நான் அதிபரானால் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மாற்றியமைப்பேன்' என, டிரம்ப் பிரசாரம் செய்தார்; எனவே, அவர் பதவியேற்ற பின், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என கூறப்படுகிறது.
மகன், மகளுக்கு பதவி : அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டிரம்ப், அதிபரின் வெள்ளை மாளிகை நிர்வாகத்தை கவனிக்க, துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள, மைக் பென்ஸ் தலைமையில் குழுவை அறிவித்துள்ளார். அதிபரின் செயல்பாடுகளை தீர்மானிக்கும் இக்குழுவில், டிரம்ப்பின் மகன்கள், ஜூனியர் டிரம்ப், எரிக் டிரம்ப், மகள் இவாங்கா டிரம்ப், ஆகியோருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், டிரம்ப் சார்ந்துள்ள குடியரசு கட்சியின் நிர்வாகிகள் சிலரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.