காபூல் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில், நேற்று நடந்த குண்டு வெடிப்பில், நான்கு பேர்பலியாயினர். ஆசிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில், அல் - குவைதா பயங்கரவாதிகளை ஒடுக்க, அமெரிக்க அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் பயனாக, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பலரும் கொல்லப்பட்டனர்; பயங்கரவாத முகாம்களும் அழிக்கப்பட்டன. இந்நிலையில், காபூல் நகரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில், நேற்று திடீரென குண்டு வெடித்தது; இதில், நான்கு பேர் பலியாயினர். இறந்தவர்கள் யார் என்ற விபரம் தெரியவில்லை. இந்த தாக்குதலுக்கு, தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
பாதுகாப்பு குறைபாடு : காரணமாகவே, குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, விரிவான விசாரணை நடத்தப்படும் என, ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு குறைபாடு : காரணமாகவே, குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, விரிவான விசாரணை நடத்தப்படும் என, ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது.