புதுடில்லி : ரூபா
ய் நோட்டு வாபஸ் என்பது பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசிக்காமல் பிரதமர் மோடி எடுத்த தவறான முடிவு என முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.தனியார் டிவி சேனல் ஒன்றிற்கு, ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றதை பற்றி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றது பிரதமர் மோடியின் தவறான முடிவு. பொருளாதார நிபுணர்களை ஆலோசிக்காமல், பொருளாதார நிலையை ஆராயாமல் எடுக்கப்பட்ட முடிவு இது.ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறுவதால் மட்டும் கறுப்பு பணத்தை ஒழித்து விட முடியாது.இதன் பாதிப்புக்களில் இருந்து எப்படி வெளியே வருவது என்பதை பற்றி யோசிக்காமல், மக்களிடம் வெளிப்பட்டுள்ள உணர்வுகளை பார்த்து அரசு பயந்து போய் உள்ளது. அதனால் இந்த நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கு வழியே இல்லை. பிரதமர் எடுத்த தவறான முடிவுகளின் விளைவுகளை நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். பிரதமரின் இந்த முடிவு பற்றி ஆர்பிஐ அதிகாரிகளிடம் கூறுகையில் அவர்கள் கேள்வி கேட்கவில்லையா? இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து அவர்களுக்கு தெரியாதா? இல்லை அவர்களுக்கே இந்த பாதிப்புக்கள் குறித்து தெரியுமா, தெரியாதா என எனக்கு தெரியவில்லை.இந்த 86 சதவீதம் ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றதன் மூலம் பொருளாதாரத்தின் சக்கரங்கள் முடக்கப்பட்டு, நசுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் ஆரம்ப நிலை தாக்கத்தை இந்த நாடு தற்போது பார்த்துள்ளது. இன்னும் என்னவெல்லாம் விளைவுகள் ஏற்பட போகிறது என்பது போக போகத்தான் தெரியும் என்றார்.
English Summary:
Economists withdraws bill without consulting the Prime Minister and former Finance Minister P Chidambaram had made the wrong decision