சென்னை: சென்னை பாரிமுனை பகுதியில் தனியார் வங்கி உள்ள 5 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. வங்கி ஊழியர்கள் ஜன்னல் வழியாக கீழே குதித்து தப்பினர்.
சென்னையில் ரூபாய் நோட்டு வாபஸ் பிரச்னையால் அனைத்து வங்கி கிளைகளிலும் மக்கள் கூட்டம் அதிமாக உள்ளது. வங்கிகளின் ஊழியர்களும் பல நாட்களாக விடுமுறையின்றி பணியாற்றி வருகின்றனர்.
கரும்புகை சூழ்ந்தது:
இந்த சூழ்நிலையில், சென்னை பாரிமுனை பகுதியில் தனியார் வங்கி உள்ள வங்கி கட்டடத்தில் காலையில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தான் ஊழியர்கள்வங்கி உள்ளே நுழைந்து இருந்தனர். தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை சூழ்ந்தது ஊழியர்கள் ஜன்னல் வழியாக கீழே குதித்து தப்பினர். தீயணைப்பு ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் கரும்புகை சூழ்ந்துள்ளது. தீ பிடித்த கட்டடத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்டுகிறது.
கட்டடத்தில் உள்ள ஜெனரேட்டரில் இருந்து தீ பற்றி இருக்கலாம் என முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. தீ விபத்து ஏற்பட்ட அந்த கட்டடத்தின் அருகே குடியிருப்புகளும் உள்ளதால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
English Summary:
The 5-story building in the area of private banking in Chennai parimunai fire. Bank employees escaped through the window and jumping down.