கடந்த 8ம் தேதி செவ்வாய் அன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் என்று அறிவிக்கப்பட்டது. வழக்கம் போல பேச்சு தானே என்று பலரும் டிவியில் வேறு சீரியல்கள், நிகழ்ச்சிகளை பார்த்தபடி இருந்தனர். மோடி வழக்கம் போல பொருளாதார மாற்றங்கள் பற்றி பேச, அதுவும் இந்தியில் பேச ஆரம்பித்தார்.
கடைசியில் அவர் போட்ட மெகா குண்டு யாருக்கும் ஒரு கணம் புரியாமல் தலை கிறுகிறுத்தது. சாமான்ய மக்களை விட, கட்டுக்கட்டாக, மூட்டை மூட்டையாக கரன்சி வைத்திருந்தவர்களுக்கு அதிகமாக கண் கட்டியது. மோடி அப்படி என்ன தான் அறிவித்தார்? அந்த நொடி வரை புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது; புது நோட்டுகள் 500, 2,000 ரூபாய்களுக்கு செல்லா நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்து விட்டு ஜெய்ஹிந்த் சொல்லி விட்டு போய் விட்டார் மோடி.
சுமார் 8.20 மணி அளவில் எல்லா டிவிக்களிலும் ேமாடியின் தலாடி மிட்நைட் அதிர்ச்சி அறிவிப்பு, பளீச் வாசகங்களாக, அதற்கேற்ப பின்னணி ஓசைகளுடன் மின்னியது. பார்த்த எல்லாருக்கும் திக் திக். அடுத்த நிமிடமே பலரின் வீடுகளில் பரபரப்பு; பீரோ, பெட்டிகளில் பத்திரமாக ‘பொத்தி பொத்தி’ வைத்திருந்த ரூபாய் நோட்டுக்கள் எல்லாம் வெளியே எடுத்துக்ெகாண்டு, கணவன்மார்கள் அந்த இரவில் படுக்கையை விட்டு எழுந்து ஏடிஎம்களை தேடிப் போய் டெபாசிட் செய்ய வரிசையில் நின்றனர்.
பெண்கள் பதறிப்போய், அஞ்சரை பெட்டி வரை கணவனுக்கு தெரியாமல், பதுக்கி பத்திரமாக வைத்திருந்த நோட்டுகளை எடுத்து வைத்து மோடியை சகட்டு மேனிக்கு வசை பாடினர். அடுத்த இரண்டு நாள் எங்கும் பரபரப்பு; வங்கிகளில் பழைய நோட்டை மாற்ற அலைமோதும் கூட்டம்; அடுத்த நாள் ஏடிஎம்களில் பணத்தை எடுக்க கூட்டம். பல இடங்களில் புதிய ரூபாய் நோட்டுகள் வராத நிலையில், பழைய நோட்டுகள் எடுக்க எடுக்க தீர்ந்து போயின. மக்கள் அதிலும் விரக்தி.
இப்படி நாடு முழுக்க களேபரம் நடந்து கொண்டிருக்க, ஜப்பான் பறந்து விட்டார் மோடி. அவர் போட்ட கணக்கு, இப்படி மிட்நைட் அதிரடியால் உடனே மக்கள் பணத்தை மாற்ற கஷ்டப்படுவர். அதே சமயம், வீடுகளில் சேமித்து பத்திரப்படுத்திய பணம் டெபாசிட்டாக வங்கிகளில் குவியும். மக்கள் சிரமம் தற்காலிகம் தான். ஆனால், கருப்பு பணம் பதுக்கியவர்களுக்கோ வாழ்வை தொலைத்த பயம் வரும். கருப்பு பணத்தை அவர்கள் இனி பதுக்க முடியாது; மறைத்து வைத்திருப்பதை ஒன்று, வங்கியில் அபராத வரியுடன் செலுத்தி டெபாசிட் செய்து 100 கோடிக்கு வெறும் 10 கோடியை வெள்ளையாக்கலாம்.
மேலும், அவர்கள் வருமான வரி பிடியில் வந்துவிடுவர். இல்லை குப்பையில் போட்டு அழித்து விடத்தான் முடியும். இப்படி பல கணக்குகளை போட்ட மோடிக்கு எப்படியும், இந்த இரு செல்லாத நோட்டுகள் புழக்கத்தில் 10 சதவீதமாவது கருப்பு பணம், அதாவது 1.4 லட்சம் கோடி அழிக்கப்பட்டு விடும் என்று ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்படி கருப்பு பணம் அழிந்தால் மீண்டும் சேர்க்கவே மாட்டார்களா? அரசியல் வாதிகள் மட்டும் தான் பதுக்கினரா? தொழிலதிபர்கள், வியாபாரிகள், உணவு, சிமென்ட் போன்ற பொருட்களை பதுக்கி சந்தையை ஆதிக்கம் செலுத்தும் பதுக்கல்காரர்கள் என்று பலரும் கருப்பு பண சொந்தக்காரர்கள் தான்.
ஒரு பக்கம் கருப்பு பணமும் ஒழியும், இன்னொரு பக்கம் பதுக்கல்களும் அறவே குறையும். அப்படியானால் விலைவாசி குறையும்; ரியல் எஸ்டேட் மதிப்பு சரியும்; ஏன் தங்க நகை விலை கூட சரிந்து நியாயமான நிலைக்கு வரும். செயற்கை விலை ஏற்றம் திடீர் திடீரென ஏற்படுவது தடுக்கப்பட்டு, மக்களின் தேவை, பொருடர்கள் உற்பத்தி, விநியோகம் என்பதை பொறுத்து விலை ஏற்ற இறக்கம் ஏற்படும். அதிக உற்பத்தி இருந்தால் தானாகவே விலை குறையும். குறைவான உற்பத்தி என்றால் சந்தையில் விலை சற்று அதிகரிக்கும். இது இயற்கையான விலை ஏற்ற, இறக்கங்கள்.
யாருக்கு இழப்பு
ரியல் எஸ்டேட்: நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் பல மடங்கு மதிப்பு உயர்ந்து நகரங்களை ஒட்டிய கிராமங்களில் கூட நில மதிப்பு, கட்டிட மதிப்பு, சாமான்ய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு விண்ணை முட்டி நிற்கிறது. ரியல் எஸ்டேட் அதிபர்கள் பலரும் வங்கிகளில் கடன் வாங்கி கட்டியிருந்தால் அவர்கள் மட்டும் ஏதோ பேரம் பேசி , கட்டிய பலமாடி குடியிருப்புகளை விற்று ஓரளவு லாபம் சம்பாதித்தனர்.
பல மடங்கு கருப்பு பணத்தை போட்டு மெகா திட்டங்களில் நூற்றுக்கணக்கில் பலமாடி குடியிருப்புகளை கட்டியவர்கள் பலரும், விலை படியாதவரை அப்படியே போட்டு ைவத்தனர். இப்போது ரியல் எஸ்டேட்டில் கருப்பு பணத்தை போட்டு நிலம் வாங்கியும், பலமாடி குடியிருப்புகள் கட்டியும் வைத்திருந்தால், இப்போது தானாக தங்களின் பண தட்டுப்பாட்டை போக்க விலையை குறைத்து விற்று தான் ஆக வேண்டும். மேலும் இனி வீடுகள், நில மதிப்பு சரிய ஆரம்பித்து விடும்.
* தங்க நகைகள்: மோடி அறிவித்த அன்றிரவு நள்ளிரவையும் தாண்டி நகைக்கடைகளில் விற்பனை சூடு பிடித்தது. பலரும் லட்சக்கணக்கில் நகைகள் வாங்கினர். கிட்டத்தட்ட ஒரே இரவில் 1000 கோடி ரூபாய் கருப்பு பணம் அளவுக்கு தங்கம் கைமாறியதாக கூறப்படுகிறது. இப்படி நடக்கும் என்று தெரிந்து, மறுநாள் காலையில் டெல்லி உட்பட பல நகரங்களில் நகைக்கடைகளில் அதிரடி சோதனை நடந்தது. பான் கார்டு இல்லாமல் நகை விற்ற நகைக்கடை காரர்கள் உண்மையை கக்கி விட்டனர். இன்னும் பல கடைகளில் அவர்களின் சிசிடிவி பதிவை ஒப்படைக்க வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. நேற்றுமுன்தினம் ஒரு நாள் மட்டும் தங்கம் விலை ஏற்றம் கண்டது; ஆனால், கடந்த 2 நாளில் சரிய ஆரம்பித்துள்ளது.
* ஹவாலா: வருமான வரித்துறையின் அடுத்த குறி ஹவாலா வர்த்தகர்கள் மீது தான். நகைக்கடைகள் ேபாலவே ஹவாலா, கரன்சி மாற்றித்தரும் நிறுவனங்கள் மீது அதிரடி சோதனை நடந்தது. நகைக்கடைகள் ேபாலவே ஹவாலா, மணி எக்சேஞ்ச் பிசினஸ்மென்கள் , பல கோடி கருப்பு பணத்தை வாங்கி குவித்தனர். அதை அறிந்த வருமான வரித்துறை அவர்களையும் மடக்கி பிடித்துள்ளது.
* உயர் விலை பொருட்கள்: கார், பலமாடிக்குடியிருப்புகள் போன்ற விலை உயர்ந்த முதலீடுகளை செய்வோரை வருமான வரித்துறை கண்காணிக்க ஆரம்பித்துள்ளது. இன்னும் சில நாட்கள் தொடர்ந்து இரவு பகலாக கண்காணிப்பு தொடரும். இதுபோல சிமென்ட் பதுக்கல் காரர்கள் மீதும் கண் விழுந்துள்ளது. இதுபோல, உணவுப்பொருட்கள், எண்ணெய் பதுக்கல் விவகாரங்களையும் அந்தந்த துறை அதிகாரிகள் கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர். இவர்கள் அனைவரும் கருப்பு பணத்தை வங்கியில் போடுகிறார்களா, என்ன செய்கின்றனர், சாமான்ய மக்களை கருவியாக பயன்படுத்தி, கருப்பு பணத்தை மாற்றுகிறார்களா என்றும் கடுமையாக கண்காணிப்பு நடக்கிறது.
யாருக்கு லாபம்
கள்ள நோட்டு அழியும்: வட மாநிலங்களில் பல இடங்களிலும் மூட்டை மூட்டையாக பணம் எரிக்கப்படுகிறது. சாலையில் வீசப்படுகிறது. இவை யாவும் கருப்பு பணம் அல்ல; கள்ள நோட்டுகள். அப்பாவி மக்களிடம் புழங்க வைக்க பதுக்கல்காரர்கள், சமூக விரோதிகள் பதுக்கிய கள்ளப்பணம் இது. போலி ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, இந்தியாவுக்குள் பாகிஸ்தான் அனுப்புவது இந்த நோட்டுகள். இவை யாவும் தான் இப்படி எரிக்கவும், வீசப்படவும் செய்கின்றனர் அதை பதுக்கியவர்கள்.
* கிராம பொருளாதாரம்: மொத்தம் உள்ள 10 லட்சம் கிளைகளில் கிராமங்களில் மட்டும் 6.8 லட்சம் வங்கி கிளைகள் உள்ளன. இன்னும் பல கிராமங்களில் கிளைகள் அடுத்த சில மாதங்களில் ஆரம்பிக்கப்படலாம். காரணம், வங்கி கணக்கு திட்டமான ஜனதான் திட்டத்துக்கு மக்களிடம் மீண்டும் மவுசு ஏற்படும்.
அரசு மானியங்கள் எல்லாம் ஜன்தான் திட்டம் மூலம் வங்கி கணக்கில் செலுத்தப்படுவது அதிகரிக்கப்படும். மாநில அரசுகள் இதை தட்ட முடியாது.
* சில்லரை வர்த்தகம்: பெட்டிக்கடைகள், காய்கறி கடைகள் ேபான்றவை பெரிதாக பாதிக்கப்பட வாய்ப்பில்ைல. எல்லாரும் ஆன்லைனிலோ, கார்டு மூலமோ பொருட்களை வாங்க மாட்டார்கள். கிராமங்களை ஒட்டிய பகுதிகளில் இந்த முறை பரவும் போது கிராமங்களில் நிலை மாறலாம் என்று அரசு எதிர்பார்க்கிறது.
* உணவு, எண்ணெய்: அரிசி உட்பட உணவு பொருட்கள் எண்ணெய் பொருட்கள் எல்லாம் இனி செயற்கை விலை ஏற்றம் காணாது. பதுக்கல் அறவே போய்விடும். விரைவில் இந்த மாற்றங்கள் உருவாக வாய்ப்புண்டு. சொந்த வீடு: லட்சங்களில் வங்கியில் கடன் வாங்கி ஐடி உட்பட ேமல் தட்டு மக்கள் மட்டும் தொடர்ந்து புது வீடு வாங்கி வந்தனர். ஆனால், கடந்த சில ஆண்டாக நடுத்தர, ஏழை மக்களுக்கு உகந்த விலையில் வீடுகள் இல்லவே இல்லை.
ஒரு லட்சம் இல்லாமல், கடன் தகுதி இல்லாமல் காலம் காலமாக வாடகை வீட்டில், உரிமையாளரின் ஆதிக்கத்தனத்துக்கு கட்டுப்பட்டு, சரிவர குடிநீர் இன்றி, கழிவறை வசதி இல்லாமல் குடும்பத்தை ஓட்டி வருகின்றனர். இவர்களுக்கு கண்டிப்பாக அவர்களின் பட்ஜெட்டில் வீடுகள், மனைகள் கிடைக்கலாம்.
இதெல்லாம் நாம் மட்டுமல்ல, அரசின் எதிர்பார்ப்பும் தான். ஆனால், மோடி மிட்நைட் அட்டாக் செய்தால் மட்டும் போதாது, அதிகாரிகள் மட்டத்திலும் தொடர் நடவடிக்கைகள் எடுத்தால் தான் மக்களுக்கு உண்மையில் பலன்கள் கிடைக்கும். ேமாடி எதிர்பார்க்கும் ெபாருளாதார மாற்றங்கள் வரும். பழைய நோட்டை மாற்றி விட்டோம் மிக கஷ்டப்பட்டு; பலன் கிடைக்க சில மாதங்கள் காத்திருப்போம். நடக்குமா என்று.
ரூ.4,00,000 கோடி வங்கிக்குள் வருமா?
செல்லாததாக்கப்பட்ட ரூ. 500, 1000 நோட்டுகள் திரும்ப வங்கிக்குள் வரும் என்று அரசு நம்புகிறது. இந்த இரு நோட்டுகளில் மொத்த புழக்கம் 8.4 லட்சம் கோடி ரூபாய். இதில் 4 லட்சம் கோடி ரூபாய் வங்கி கணக்குகளுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி வருவதால் வட்டி விகிதம் குறையும். கடன்கள் மீதான மாத தவணையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு சந்தை வரை ஐடி கண்காணிப்பு
பதுக்கல்காரர்கள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகள், கல்வி, பங்கு சந்தை உட்பட நிறுவனங்கள், சந்தேகத்துக்கு இடமான நிறுவனங்கள் என்று பலரையும் கருப்பு பண சந்தேகத்துடன் வருமான வரித்துறை கண்காணிக்க ஆரம்பித்து விட்டது. எப்படியும் இவர்கள் குறைந்தபட்ச பணத்தையாவது வங்கி வரம்புக்குள் கொண்டு வரலாம் என்பதால் வருமான வரித்துறையில், எல்லா வங்கிகளின் ரொக்க டெபாசிட்களையும் கண்காணிக்க தனி பிரிவுகள் அமர்த்தப்பட்டுள்ளன.
* காசோலை, மின்னணு பரிவர்த்தனை போன்ற சேவைகளுக்காக வங்கிகள் இன்றும் திறந்திருக்கும்.
* குறைந்த அளவில் பணம் டெபாசிட் செய்பவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது. நோட்டீஸ் அனுப்பப்பட மாட்டாது.
* வரி விலக்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிக பணம் செலுத்து பவர்களுக்குதான் கேள்விகள் வரும்.