புதுடெல்லி: சீனா-பாகிஸ்தானுக்கு போட்டியாக இந்தியா-ஜப்பான் இணைந்து செயல்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் சீனா நட்பு கொண்டுள்ளபோதிலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு விஷயங்களில் பாகிஸ்தான் ஆதரவு முடிவையே எடுத்து வருகிறது. மேலும் ஆக்ரமிப்பு காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்கு சரக்கு போக்குவரத்து பாதை அமைக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் சமீபத்தில் பதன்கோட் தொடங்கி உரி ராணுவ முகாம் வரையும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் தலைவன் மசூத் அசார் இந்திய நாடாளுமன்ற தாக்குதலில் சூளையாக செயல்பட்டவன். அவனை ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் சீனா முட்டுக்கட்டை போட்டுவருகிறது. மேலும் அணுசப்ளை செய்யும் குழுவில் இந்தியாவை சேர்க்கவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் தென்சீன கடல் எல்லை விவகாரத்தில் மட்டும் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்த்தது. இதற்கு இந்தியா ஆதரவு கொடுக்கவில்லை.
இந்தியாவுக்கு பல்வேறு வகையில் எதிர்ப்பை தெரிவிக்கும் சீனாவை சமாளிக்க தற்போது மத்திய அரசு ரஷ்யா மற்றும் ஜப்பான் உதவியை நாட ஆரம்பித்துள்ளது. ரஷ்யாவுடன் உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு ஆயுத கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் சென்ற பிரதமர் மோடி பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். பின்னர் பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபியும் பல்வேறு முக்கிய முடிவுகளை மேற்கொண்டனர். அதில் தென் சீன கடல் எல்லை விவகாரம் மிகவும் முக்கியமானது. இதில் ஐநா அமைத்த சர்வதேச தீர்பாயத்தின் தீர்ப்புப்படி நடந்து கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.
இதைவிட முக்கியமாக தெற்கு ஆசியாவில் சரக்கு போக்குவரத்தை கைக்குள் கொண்டுவரும் வகையில் பாகிஸ்தானில் உள்ள கவதார் துறைமுகத்தை மேம்படுத்த சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் ஆப்கன் உள்ளிட்ட நாடுகளுக்கு சரக்கு போக்குவரத்தை பாகிஸ்தான் வழியாக மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டது. இதற்கு போட்டியாக ஈரான் நாட்டில் உள்ள சபாகர் துறைமுகத்தை இந்தியாவும், ஜப்பானும் இணைந்து சீரமைத்து தெற்கு ஆசியா மட்டுமல்லாமல் மத்திய ஆசிய நாடுகளுக்கும் இதன்வழியாக சரக்கு போக்குவரத்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இது தொடர்பான இருநாடுகளும் இணைந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
புல்லட் ரயிலில் மோடி பயணம்
ஜப்பான் சென்ற பிரதர் மோடி, அங்குள்ள அதிவிரைவு ரயில் சேவையான ஷின்கான்சென் புல்லட் ரயிலில் நேற்று பயணம் செய்தார். தலைநகர் டோக்கியோவுடன் முக்கிய நகரமான கோபேவை இணைக்கும் ஷின்கான்சென் புல்லட் ரயிலில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் பிரதமர் மோடி பயணம் செய்தார். இந்த ரயில் மணிக்கு 240 முதல் 320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாகும்.
இந்த ரயில் சேவையை தான் இந்தியாவில் மும்பை-அகமதாபாத் இடையே அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதிவேக புல்லட் ரயில்சேவைக்கான வழித்தடம் அமைக்கும் பணியை வருகிற 2018ம் ஆண்டு தொடங்கி 2023ம் ஆண்டு ரயில்களை இயக்க ஜப்பான் முன்வந்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘நாங்கள் புல்லட் ரயிலில் பயணம் செய்கின்றோம்.” என பதிவிட்டுள்ளார். ஜப்பான் பிரதமருடன் ரயிலில் அமர்ந்து செல்லும் புகைப்படங்களையும் பிரதமர் மோடி இணைத்துள்ளார்.
உறவுபாதிக்கப்படும் சீனா எச்சரிக்கை
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஜப்பான் சென்றது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சீனா அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: அணுசப்ளை, தென்சீன கடல் விவகாரங்களில் இந்தியா-சீனா இடையே மோதலை ஏற்படுத்த ஜப்பான் விரும்புகிறது. சீனாவை ராஜதந்திர ரீதியாக முடக்கும் முயற்சியில் தற்போதைய ஜப்பான் அரசு செயல்பட்டு வருகிறது.
சீனாவை கட்டுப்படுத்த இந்தியாவை சிப்பாயாக பயன்படுத்தும் ஜப்பானின் முயற்சி பலிக்காது. ஏனெனில் ஜப்பான், சீனா போன்று வளர இந்தியா விரும்புகிறது. அதற்காக தற்ேபாது ஜப்பானுடன் இந்தியா நெருங்குகிறது. இது சகோதர உறவுக்கு வழிவகுக்காது. தென்சீன கடல் எல்லை விவகாரத்தில் இந்தியாவின் இதே கொள்கை தொடர்ந்தால் இந்தியா-சீனா இடையிலான உறவு மட்டுமல்ல வர்த்தகமும் பாதிக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
* இந்தியாவின் மேற்குஎல்லையை பலப்படுத்த ஜப்பானுடன் இணைந்து செயல்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஈரான், ஆப்கன் நாடுகள் இதனால் பயன்பெறும்.
* ஈரானில் உள்ள சபாகர் துறைமுகத்தை மேம்படுத்த இந்தியா ஏற்கனவே ரூ.3500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.