அ.தி.மு.க., - தி.மு.க., வழங்கிய, நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி பெயர்கள் இல்லை.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளில், 19ல் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில், பிரசாரம் செய்ய உள்ள, நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை, தேர்தல் கமிஷனிடம் கட்சிகள் வழங்கி உள்ளன.
வேட்பாளர் செலவு:
தேர்தல் கமிஷன் அனுமதி பெற்ற நட்சத்திர பேச்சாளர்கள், பிரசாரத்திற்கு சென்றால், அவர்களின் போக்குவரத்து செலவு, வேட்பாளர் செலவுக் கணக்கில் சேர்க்கப்படாது.
அனுமதி பெறாத நட்சத்திர பேச்சாளர்கள், பிரசாரத்திற்கு சென்றால், அவர்களின் போக்குவரத்து செலவு, வேட்பாளர் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்.
வழக்கமாக, அ.தி.மு.க.,வின் நட்சத்திரபேச்சாளர்கள் பட்டியலில், ஜெயலலிதா பெயர், முதலிடம் பெறும்; அதேபோல், தி.மு.க., பட்டியலில், கருணாநிதி பெயர் இடம் பெறும்.
ஸ்டாலின் பெயர்:
ஆனால், மூன்று தொகுதி தேர்தலுக்காக, அ.தி.மு.க., சார்பில் வழங்கப்பட்ட, நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், ஜெயலலிதா பெயர் இல்லை; அமைச்சர் பன்னீர்செல்வம் பெயர் முதலில் உள்ளது. மேலும், அமைச்சர்கள், நடிகர், நடிகையர் என, 40 பெயர்கள் உள்ளன.
தி.மு.க., பட்டியலில், கருணாநிதி பெயர் இல்லை; அதற்குபதிலாக, பொருளாளர் ஸ்டாலின் பெயர், முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து, துரைமுருகன், கனிமொழி என, 40 பேர் இடம் பெற்றுள்ளனர்.பா.ஜ., பட்டியலில், அமித் ஷா, முரளிதர ராவ், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன்,
இல.கணேசன், எச்.ராஜா என, 40 பேர் இடம் பெற்றுள்ளனர். தே.மு.தி.க., பட்டியலில், விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் உட்பட, 40 பேர் இடம் பெற்றுள்ளனர். பா.ம.க., பட்டியலில், அன்புமணி பெயர் முதலிலும், ராமதாஸ் பெயர் இரண்டாவதாகவும் இடம் பெற்றுள்ளது.
'ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர், உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதால், அவர்களின் பெயர், நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை' என, அ.தி.மு.க., - தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.