'அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் சட்டசபை தொகுதிகளின் தேர்தலுக்குப் பின், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் பலம், 92 ஆக உயரும்' என, தி.மு.க., பொரு ளாளர் ஸ்டாலின் பேசி வருகிறார். எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும், தேர்தல் பணிகளுக்கு அனுப்பி உள்ளார்; 64 மாவட்ட செயலர்களையும், மூன்று தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார்.மூன்று தொகுதிகளிலும், தி.மு.க., வெற்றி பெற்றால், உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க.,வுக்கு பெரிய பலத்தை உருவாக்கும். எனவே, பிரசாரத்திற்கு செல்லும்படி, ராஜ்யசபா, எம்.பி., கனிமொழியிடம், கட்சி தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அதன் பின்னே, தி.மு.க., நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், கனிமொழி பெயரை, ஸ்டாலின் சேர்த்துள்ளார்.
இது குறித்து, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'ஆளுங்கட்சியின் எதிர்ப்பு ஓட்டுகள் மொத்தமாக, தி.மு.க.,வுக்கு தான் கிடைக்கும். தேர்தல் பணிகள் சரிவர நடக்கிறதா என்பதை கண்டறிய, பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது' என்றார்.