புதுடெல்லி: ‘‘பணம் வரும் வழியை அறிய அரசுக்கு உரிமை உண்டு’’ என நிதியமைச்சர் அருண் ஜெட்லி பதில் அளித்துள்ளார். மத்திய அரசு நடவடிக்கை பற்றி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கபில் சிபல் கூறுகையில், ‘‘இது ஒரு அரசியல் வித்தை. கறுப்புபணம் பற்றி பேசும் பா.ஜனதா உ.பி., பஞ்சாப் உள்பட தேர்தல் வரவிருக்கும் மாநிலங்களில் செய்யும் செலவுகள் குறித்து வெளிப்படையாக அறிவிக்க தயாரா? தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க மக்கள் ஏன் வரிசையில் நிற்க வேண்டும்’’ என்று கேட்டு இருந்தார். இதேபோல், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறும்போது 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவிக்கும் திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. சில பா.ஜ நண்பர்களுக்கு மட்டும் இது முன்கூட்டியே தெரிய வந்துள்ளது’’ என குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு நேற்று பதில் அளித்த அருண் ஜெட்லி கூறியதாவது:உங்கள் பணம் என்றாலும் அது நியாயமான முறையில் வந்ததா என்பதை அறிந்து கொள்ள அரசாங்கத்திற்கும் உரிமை உண்டு. உங்கள் பணத்திற்கு நீங்கள் வரி கட்டியிருக்கிறீர்களா என்பதை நாட்டு மக்களும், அரசாங்கமும் அறிந்து கொள்ள உரிமை உண்டு. பழைய நோட்டுகளை செல்லாது என்ற அறிவிப்புக்கு பல்வேறு விதமான விமர்சனங்கள் அரசியல்கட்சிகள் மத்தியில் இருந்து வந்துள்ளன. சிலர் பொறுப்பில்லாமல் கருத்து தெரிவித்துள்ளனர்.
எங்களது இந்த முயற்சியால் அரசியல் சுத்தப்படுத்தப்படும். அது சிலருக்கு சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ஒருவர்(கெஜ்ரிவால்) பொறுப்பற்ற முறையில் இதுபற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்த திட்டம் சிலருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. அதனால் அவர்கள் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரை வங்கியில் முதலீடு செய்துவிட்டனர் என்று கூறியிருக்கிறார். செப்டம்பர் மாதம்தான் வங்கியில் முதலீடு அதிகரித்தது. அப்போது 7வது சம்பளக்கமிஷன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 15 வரை அரசு வழங்கிய அந்த பணத்தை அவர்கள் வங்கிகளில் முதலீடு செய்துள்ளனர். இதை புதிய கதை கட்டி குற்றச்சாட்டாக அவர் கூறுகிறார்.இவ்வாறு அருண்ஜெட்லி பதில் அளித்தார்.