புதுடெல்லி: நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் கரன்சிகளை வங்கி கணக்கில் செலுத்தலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு காரணமாக இதுவரை காலியாக இருந்த ஜன்தன் கணக்குகளில் திடீரென கோடிக்கணக்கான ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்டில் ஜன்தன் யோஜனா என்ற பெயரில் அனைவருக்கும் வங்கிக் கணக்கு துவக்கும் திட்டத்தை அறிவித்தார். மத்திய அரசின் மானியம் அனைத்தும் வங்கி மூலமாகவே தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் அனைவருக்கும் மினிமம் டெபாசிட் இல்லாமல் வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. 2016 மே நிலவரப்படி 22.29 கோடி பேருக்கு வங்கி கணக்குகள் உள்ளன. தற்போது இவற்றில் 39 ஆயிரத்து 251 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த சூழலில் கடந்த 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் கரன்சிகள் செல்லாது என்ற பிரதமர் அறிவித்தார். மேலும், அவற்றை வங்கியில் டெபாசிட் செய்யவோ, மாற்றி கொள்ளவோ செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நீண்ட நாட்களாக காலியாக இருந்த பல்வேறு ஜன் தன் வங்கி கணக்குகளிலும் கடந்த 2 நாட்களில் ஏராளமான தொகைகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. ஏழை மக்கள் துவங்கிய ஜன்தன் வங்கி கணக்குகள் பலவற்றையும், கருப்பு பணத்ைத வெள்ளையாக மாற்றுவதற்கு புரோக்கர்கள் சிலர் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர். கடந்த 8ம் தேதி வரை வெறும் 2 ரூபாய் மட்டுமே இருந்த வங்கி கணக்குகளில் ஒரே நாளில் ரூ.49 ஆயிரம் வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆக்ரா வங்கி அதிகாரி அஜய் அக்னி கோத்ரி கூறுகையில், ‘‘எங்களது வங்கியில் உள்ள சுமார் 15 ஆயிரம் ஜன்தன் கணக்குகளில் ஒரே நாளில் ரூ.49 ஆயிரம் வரை டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது’’ என்றார். இதே போல் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள வங்கி அதிகாரிகளும் குறிப்பிட்டுள்ளனர். இதனால், ஏழைகளின் கணக்குகளில் பணம் குவிந்து பணக்காரர்களாகி உள்ளனர். ஆனால், அந்த பணம் எப்போது அவர்களிடம் இருந்து புரோக்கர்களால் பறிக்கப்படும் என்பதுதான் தெரியவில்லை.