அப்போலோ மருத்துவமனையிலிருந்து எப்போது வீடு திரும்புவது என்பதை முதலமைச்சர் ஜெயலலிதாவே முடிவு செய்வார் என அப்போலோ மருத்துவமனைத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல் நலக் குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் உள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அப்போலோ சென்று வருகின்றனர். அவர் விரைவில் உடல் நலம்பெற வேண்டிஅதிமுகவினர் மட்டுமின்றி பொதுமக்களும் மதவேறுபாடின்றி வழிபாடுகளும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அப்போலோ குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி, முதலமைச்சர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்தது வருவதாகவும் அது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தம்மைச் சுற்றி நடப்பதை முதலமைச்சர் ஜெயலலிதா நன்கு உணர்ந்து வருவதாகவும் மருத்துவமனையில் இருந்து எப்போது வீடு திரும்புவது என்பதை அவரே முடிவு செய்வார் எனவும் கூறியுள்ளார்.