லக்னோ: உ.பி., சட்டசபை தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சியின் கோட்டையாக கருதப்படும், பாபினா தொகுதியில் போட்டியிட, முதல்வர் அகிலேஷ் யாதவ் திட்டமிட்டுள்ளார்.
உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், மொத்தம் உள்ள, 403 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் ஆண்டு துவக்கத்தில் தேர்தல் நடக்கவுள்ளது.
பகுஜன் கோட்டையில் அகிலேஷ்:
இந்த தேர்தலில், சமாஜ்வாதி கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியல், கட்சித் தலைவர் முலாயம் சிங்கிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கோட்டையாக கருதப்படும், பந்தல்கண்ட் பகுதியில் உள்ள, பாபினா தொகுதியில், முதல்வர், அகிலேஷ் யாதவ் போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தத் தொகுதி, 2007 முதல், பகுஜன் சமாஜ் வசம் உள்ளது.கடந்த, 2012ல், சமாஜ்வாதி வென்ற தொகுதியில் போட்டியிடாமல், பகுஜன் சமாஜ் வென்ற தொகுதியில் போட்டியிட முடிவு செய்ததன் மூலம், தேர்தலில், சமாஜ்வாதி கட்சியை முன்னின்று வழிநடத்தப் போவதை, அகிலேஷ் உறுதி செய்வதாக, அவர் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary:
Lucknow: Uttar Pradesh assembly elections, the Bahujan Samaj Party, which is considered the stronghold, papina contest, Chief Minister Akhilesh Yadav plans.
Uttar Pradesh, the Samajwadi Party, is Chief Minister Akhilesh Yadav. In this state, a total of 403 assembly constituencies, the election will take place at the beginning of the year.