சென்னை:அமைதியின் மறு உருவம்; பணிவின் பிறப்பிடம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டு வந்த பன்னீர்செல்வம், சில நாட்களாக, அமைதியை தூர வீசிவிட்டு, குரலை உயர்த்தியிருப்பது கண்டு, ஒட்டுமொத்த தமிழக அமைச்சரவையே ஆடிப் போய் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் பன்னீர்செல்வம். முன்பு போல இல்லாமல், அவர், தன்னிச்சையாகவும்; வேகமாகவும் செயல்படத் துவங்கி உள்ளார். வர்தா புயல், தமிழகத்தை, குறிப்பாக சென்னையை துவம்சம் செய்யப் போகிறது என்று கிடைத்த தகவலை அடுத்து, புயலை எதிர் கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கி, அதிகாரிகளையும்; அமைச்சர்களையும், அவர் முடுக்கி விட்ட விதம், அவரது வழக்கமான நடைமுறைகளில் இருந்து சற்றே வித்தியாசமானது.
வேகம்:
அமைச்சர்களிடமும்; அதிகாரிகளிடமும் அவர் காட்டிய பணிவுடன், அவர் காட்டிய வேகமும் கொஞ்சம் அதிகம் என் கிறார் தமிழக மூத்த அமைச்சர் ஒருவர். அவர் கூறியதாவது:
வர்தா புயல் சென்னையை புரட்டிப் போட்டப் பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களை அழைத்து பேசிய பன்னீர்செல்வம், தான் ஒரு சிறந்த நிர்வாகி என நிரூபிப்பதில் முனைப்பாக இருந்தார். அப்போது, அமைச்சர்களைக் கூட்டி பேசிய போது, தன் உணர்ச்சியை கனிவாக சொல்லவில்லை; மாறாக, கடுமை காட்டி பேசினார்.
முதல்வராக ஜெயலலிதா இல்லாத சூழ்நிலையில், மொத்த சுமையும் என் தலையில் ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தை காக்க வேண்டிய பொறுப்பும்; கடமையும், என் தலைமையிலான அமைச்சரவைக்கு உள்ளது. வர்தா புயல், பெரிய அளவில் தாக்கத்தை காட்டி சென்று விட்டது. கடந்தாண்டு, மழை - வெள்ளத்தில் சிக்கித் தவித்த போது, உடனடியாக எடுக்க வேண்டிய மீட்பு நடவடிக்கைகளில், சற்று சுணக்கம் காட்டியதாலேயே பாதிப்புகள் அதிகமாக இருந்தது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
அதைப் பற்றி இப்போதைக்கு கவலைப்பட்டு பயனில்லை. விரைந்து பணியாற்றி, மக்களை பாதிப்பில் இருந்து விடுவிக்க வேண்டும். இந்த நேரத்தில், சிலர் குறுக்கே புகுந்து அரசியல் செய்ய குறுக்கு எண்ணத்தோடு செயல்படலாம். அப்படி யாருக்கேனும் எண்ணம் இருந்து, செய்ய வேண்டிய பணிகளில் அது வெளிப்படுமானால், கடுமையாக இருந்து செயல்பட வேண்டி இருக்கும்.
எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை, தங்கள் துறைகள் மூலமாக, ஒவ்வொருவரும் விரைந்து செய்ய வேண்டும். தேவையானால் மட்டும், என்னிடம் ஆலோசனை செய்யலாம். அதைவிடுத்து, இவர் சொன்னார்; அவர் உத்தரவிட்டார் என்று யாரையும் யாரும் அதிகாரமட்டமாகக் காட்டி பணிகளை செய்யாமல் விடக்கூடாது என, பன்னீர்செல்வம் அவ்வப்போது குரலை ஏற்றி இறக்கிப் பேச, அமைச்சர்கள் ஆடிப் போயினர்.
அதேபோல, தலைமைச் செயலராக இருந்த ராம் மோகன் ராவ் அலுவலகம், வீடுகளில், வருமான வரித் துறையினர், அதிரடியாக சோதனை நடத்திய போது, அடுத்து எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சில அமைச்சர்களை கூட்டி வைத்து பேசிய பன்னீர்செல்வம், வழக்கமான நடைமுறைகளில் இருந்து மாறி இருந்தார்.
எச்சரிக்கை:
மத்திய அரசு, ஊழல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் துவங்கி உள்ளது. அதை தவறு என நாம் வாதிடவோ, வெளியில் போய் சொல்லவோ முடியாது. அப்படிப்பட்டவர்களுக்கு ஆதரவாக நாம் குரல் எழுப்பினால், ஒட்டுமொத்த அமைச்சரவையும் ஊழல் அமைச்சரவை என, சாயம் பூசப்படும். அப்படிப்பட்ட ஒரு நிலை, வரக்கூடாது. அடுத்தடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் கவனமாக இருந்து செயல்பட வேண்டும்.
இந்த நேரத்தில், நமக்குள் ஒற்றுமையில்லாமல், அம்மா, சின்னம்மா, நடு அம்மா என்று சொல்லி, அமைச்சரவை செயல்பாடுகளில் யாரேனும் குட்டையை குழப்ப முயன்றால், அது, சம்பந்தப்பட்டவர்களுக்கு நல்லதல்ல. சிலருக்கு, என் தலைமையில் இருந்து செயல்பட விருப்பம் இல்லை என்றால், ஓபனாக சொல்லிவிட்டு, அமைச்சரவையில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அதுதான் நல்லது. அதில்லாமல், முதல்வர் பதவியில் இருந்து பன்னீர்செல்வம் இறங்க வேண்டும் என பேசுவதும்; தீர்மானம் போடுவதுமாக இருந்தால், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என, அமைச்சர்களிடம் பன்னீர்செல்வம் கறார் காட்டிப் பேச, அப்போதும் அமைச்சர்கள் ஆடிப் போயினர்.
சசிகலாவுக்கும்; தனக்கும் இடையே நிலவி வரும் பனிப்போரின் தொடர்ச்சியாகவே, பன்னீர்செல்வம் இப்படி பேசினாலும், அவர் முந்தைய பன்னீர்செல்வம் இல்லை என்பதையும்; எதையும், யாரையும் எதிர்த்து நின்று, ஆட்சி - அதிகாரத்தை நடத்த முடியும் என்பதையும் பன்னீர்செல்வம் காட்டத் துவங்கி இருப்பது, அமைச்சர்களுக்குள் அதிர்ச்சியை கொடுத்திருந்தாலும், பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளில் நம்பிக்கையின்மையுடன் இருந்த ஒரு சில அமைச்சர்களுக்கு புதுத் தெம்பைக் கொடுத்திருக்கிறது. அவர்கள் பன்னீர்செல்வத்திற்கு முழு ஆதரவளிப்பதாகச் சொல்லி, அவர் பின் அணிவகுத்துள்ளனர்.
இதன் அடுத்தடுத்த கட்டங்கள், இன்னும் வேகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வராக பன்னீர்செல்வம் இருக்கும் போது, அவர் கையில்தான் அதிகாரம் இருக்க வேண்டும்; வேறு யாரும் ரிமோட் கண்ட்ரோலில் ஆட்சி அதிகாரத்தை வைத்திருக்கக் கூடாது. இதுதான், பெரும்பாலான அமைச்சர்களின் எண்ணம். இதைப் புரிந்து கொண்டுதான், பணிவு பன்னீர்செல்வம், பாயும் பன்னீர்செல்வமாக மாறி உள்ளார்.இவ்வாறு, அந்த அமைச்சர் கூறினார்.
English Summary:
Chennai embodiment of peace; The question of the origin of the work described Panneerselvam, some days, threw the terrible silence, fearful voice elevation, there is an entire state cabinet and go dancing.