ஆக்ரா: ஆக்ராவில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 11 இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ. 12 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அலகாபாத்தில் 1.06 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ. 20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடர் அதிரடி சோதனைகள்:
கறுப்பு பணத்தை மீட்பதில் மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் மோடியின் உத்தரவின்படி, நாடு முழுவதும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனைகள் நடத்திய வண்ணம் உள்ளனர்.
இதன் ஒருபகுதியாக, ஆக்ராவில் புல்லியன் என்ற பிரபல தனியார் குழுமத்திற்கு சொந்தமான 11 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, கறுப்பு பணம் பதுக்கியுள்ளவர்களை கண்டுபிடிப்பது தொடர்பான ஆப்ரேசனில் வருமான வரித்துறை ஈடுபட்டு வருகிறது.
ரூ. 12 கோடி பறிமுதல்:
அதன் ஒருபகுதியாக, ஆக்ராவில் 11 இடங்களில் இன்று சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் ரூ. 12 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவர்களிடம், விசாரணை நடைபெற்று வருகிறது.
தங்கம், பணம் பறிமுதல்:
இதேபோன்று, அலகாபாத்தில் புல்லியன் நிறுவனத்தின் லாக்கரில் நடத்திய சோதனை ரூ. 1.06 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ. 20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
English summary:
Agra: Agra private company owned 11 locations tested in the Income Tax of Rs. 12 crore was seized. Moreover, in Allahabad gold and Rs 1.06 crore. 20 lakh cash was seize