சென்னை: கார்த்திகை மாதத்தில் சூரியன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் காலமாகும். விருட்சிகத்தில் சனி சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார். இது ராசிக்கு எட்டாம் இடம். எட்டில் சூரியனும் சனியும் இணைந்து உள்ளதால் பிரபல பெண் அரசியல் தலைவரின் மரணம் ஏற்படும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை நள்ளிரவு மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை இத்தனை சீக்கிரம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். செப்டம்பர் மாதம் சட்டசபையில் கம்பீரமாக கர்ஜித்த ஜெயலலிதா, செப்டம்பர் 21ம் தேதி மெட்ரோ ரயில் விழாவில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு ஏற்பட்டு முகம் காட்டாமல் மரணித்து விட்டார் என்பதை அதிமுக தொண்டர்கள் பலராலும் நம்ப முடியவில்லை.
English summary:
An astrological panchangam predict the Woman Political leader death






