தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 'சனாதன ஒழிப்பு மாநாடு' செப்டம்பர் 2-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்த மாநாட்டின் தலைப்பு மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. ‘சனாதன ஒழிப்பு’ மாநாடு என்று போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம்.உதயநிதி ஸ்டாலின்
சனாதனம், சமத்துவத்துக்கும், சமூகநீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது என அர்த்தம். அதாவது மாற்ற முடியாதது என்றும் சொல்லலாம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும், எதையும் கேள்வி கேட்க வேண்டும் என உருவானதுதான் திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும்" என்று பேசியிருந்தார். இந்தப் பேச்சு இந்திய அளவில் பேசுபொருளானது. உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு பா.ஜ.க தலைவர்கள் கண்டனங்களைப் பதிவுசெய்தனர்.
மேலும், அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு `இந்தியா' கூட்டணி என்ன சொல்லப்போகிறது என்றும் கேள்வி எழுந்தது. இதற்கிடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ``ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்தான் எனக்கானது. நீதிமன்றமாக இருந்தாலும் சரி, மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி, சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்" எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.திரிணாமுல் காங்கிரஸ்
அப்போது அவர், ``உதயநிதி ஸ்டாலினின் இது போன்ற கருத்துகளைக் கண்டிக்கிறோம். அவர் யாராக இருந்தாலும், இது போன்ற கருத்துகளை அனுமதிக்க முடியாது. நல்லிணக்கம் நமது கலாசாரம். மற்ற மதங்களை நாம் மதிக்க வேண்டும். இது போன்ற கருத்துகளுக்கும் INDIA கூட்டமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை" எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ``ஒவ்வொரு மதத்துக்கும் தனிப்பட்ட நம்பிக்கைகள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மனதைப் புண்படுத்தும் வகையில் நாம் நடந்துகொள்ளக் கூடாது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நமது அடிப்படை. நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன்" என உதயநிதி பேசியது தொடர்பாகக் கூறியிருக்கிறார்.சனாதனம்: "அமைச்சர் உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும்!'' - முதல்வர் ஸ்டாலினுக்கு டெல்லி பாஜக கடிதம்!
http://dlvr.it/SvdnR7
Tuesday 5 September 2023
Home »
» Udhayanidhi: `சனாதன தர்மத்தை மதிக்கிறேன்; மனதைப் புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது!'-மம்தா