சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள தனியார் கேன்டீனில் வைக்கப்படிருந்த உணவுப்பொருட்களை எலி தின்பதுபோன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சம்மந்தப்பட்ட கேன்டீனுக்கு சீல் வைத்ததோடு தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனை கேன்டீன்களில் ஆய்வு நடத்தவும் உணவுப்பாதுகாப்புத்துறை உத்தரவிட்டிருக்கிறது.கேன்டீனில் எலி
நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காக வந்துபோகும் இடமாக இருக்கிறது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனை வளாகத்தில் தனியாருக்கு சொந்தமான கேன்டீன் ஒன்று இயங்கிவருகிறது. இந்த நிலையில் சில நாள்களுக்கு முன்னர் அந்த தனியார் கேன்டீனில் கண்ணாடி ஷோகேஷில் வைக்கப்பட்டிருந்த வடை, பஜ்ஜி போன்ற உணவுப் பண்டங்கள் மீது எலி ஒன்று உலாவித் திரிந்தபடியும், அந்த தின்பண்டங்களை கொரித்து தின்றபடியும் இருந்திருக்கிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஒருவர் அந்த காட்சியை வீடியோவாக பதிவுசெய்து பொதுவெளியில் வெளியிட்டார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும், காட்சி ஊடகங்களிலும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. `அரசு மருத்துவமனை கேன்டீன்களிலேயே சுகாதாரத்தின் நிலை இதுதானா?' என பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்தனர்.அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
இந்தநிலையில், இந்தப் புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த ஸ்டான்லி மருத்துவமனை டீன் பாலாஜி, சம்மந்தப்பட்ட தனியார் கேன்டீனை மூட உத்தவிட்டார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து, மருத்துவமனை கேன்டீன்களை எப்படி தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்ற புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்டிருக்கிறது.குடிநீர் வசதிகூட இல்லாத எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை... பொதுமக்கள் வேதனையும் விளக்கமும்!
அதன்படி, ``கேன்டீன்களை தொடர்ந்து முறையாக சுத்தம் செய்ய வேண்டும். கிருமி நாசினிகளைத் தெளிக்க வேண்டும். பூச்சிகள், விலங்குகள் உள்ளிட்டவை எளிதில் உணவகங்களுக்குள் வராத அளவுக்கு, முறையாகப் பராமரிக்க வேண்டும். கேன்டீனுக்கு அருகில் இருக்கக்கூடிய சாக்கடைகள், கால்வாய்கள் உள்ளிட்டவற்றை முழுமையாக மூட வேண்டும். செல்லப்பிராணிகளோ, விலங்குகளோ, பறவைகளோ கேன்டீன்களுக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது. மேலும், உணவுப் பொருட்களை கையாளுபவர்கள் எப்போதும் கைகளை சோப்பு மற்றும் சுத்தமான நீரைக் கொண்டு கழுவி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். உணவுப் பொருட்கள் நல்ல தரத்துடன் இருக்கிறதா, காலாவதி ஆகியுள்ளதா என்பதை அடிக்கடி சோதனை செய்யவேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து கேன்டீன் நிர்வாகத்தினரும் முறையாகப் பின்பற்ற வேண்டும்" என பல்வேறு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மேலும், தமிழ்நாட்டில் உள்ள அரசு பொது மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என அனைத்து மருத்துவமனைகளிலும் இயங்கி வரும் கேன்டீன்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.
இந்த நிலையில், இதுகுறித்துப் பேசியிருக்கும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``கேன்டீன் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட கேன்டீனை மூடி சீல் வைத்திருக்கிறோம். அதேபோல மருத்துவமனைகளை ஆய்வு செய்யும்போது அறைகள், படுக்கைகள், கேன்டீன்கள் மட்டுமல்லாது அங்குள்ள கழிவறைகளையும் ஆய்வு செய்யப்போகிறோம். எங்கெல்லாம் சுத்தம் இல்லையோ அங்கெல்லாம் உரிய நடவடிக்கை எடுத்து பராமரிக்க உத்தரவிட்டிருக்கிறேன். அரசு மருத்துவமனை என்றாலே அங்கு சுத்தம் இருக்காது என்ற மாயத்தோற்றத்தை யாரும் உருவாக்கிவிடக்கூடாது!" எனத் தெரிவித்திருக்கிறார்.
ஏதாவது சம்பவம் நடக்கும் போதும், அது வெளியுலகுக்கு தெரியும் போது மட்டும் ஆய்வு, நடவடிக்கை என்று எடுக்காமல், இது போன்ற விவகாரங்களில் தொடர் ஆய்வுகளும், சமசரமற்ற நடவடிக்கைகளும் அவசியம் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
நெல்லை: சுகாதாரச் சீர்கேடு ஏற்படுத்தும் அரசு மருத்துவமனை - மருத்துவக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
http://dlvr.it/SyvscG
Thursday, 16 November 2023
Home »
» `அரசு மருத்துவமனை கேன்டீன்கள் சுகாதாரமாகத்தான் இருக்கின்றனவா?' - அரசின் நடவடிக்கைகள் என்னென்ன?!