இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் எந்தவொரு தகவலாக இருந்தாலும், உடனுக்குடன் சமூக வலைதளங்களில் வேகமாகப் பதிவிடப்படுகின்றன. இவ்வாறு வேகமாகப் பகிரப்படும் செய்திகள் உண்மையானவையா... பொய்யானவையா என்று தெரியாமலேயே மக்களிடத்தில் பரவி, சில நேரங்களில் வெறுப்பு பிரசாரங்களுக்கு அவை அடித்தளமாகின்றன. உதாரணத்துக்கு, வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்குதலுக்குள்ளாவதாக சமூக வலைதளங்களில் பரவிய போலி வீடியோக்களைக் கூறலாம்.ஐயன் கார்த்திகேயன்
இத்தகைய சூழலில்தான், தமிழ்நாடு அரசு தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராயும்விதமாக, உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்று அமைக்கப்படுவதாகவும், அந்தக் குழுவில் 80 பேர் இடம்பெற்றிருப்பார்கள் என்றும் சமீபத்தில் அரசாணை ஒன்று வெளியானது. இன்னொருபக்கம், `YOU TURN' யூடியூப் சேனலின் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன், அந்த சேனலின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.
அடுத்த சில நாள்களில், அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவின் திட்ட இயக்குநராக ஐயன் கார்த்திகேயனை தமிழ்நாடு அரசு நியமித்திருப்பதாகத் தகவல் வெளியானது. அதன் தொடர்ச்சியாக, உண்மை சரிபார்ப்புக் குழு உருவாக்கப்பட்டதற்கும், அதன் திட்ட இயக்குநராக ஐயன் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டதற்கும் எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தன. குறிப்பாக, `தி.மு.க-வுக்கு ஆதரவான கருத்துகளைப் பேசுபவர் ஐயன் கார்த்திகேயன்' என்று விமர்சனங்கள் எழுந்தன.அதிமுக
இத்தகைய சூழலில்தான், உண்மை சரிபார்ப்புக் குழுவுக்கும், அதன் திட்ட இயக்குநராக ஐயன் கார்த்திகேயன் செயல்படவும் தடைவிதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு அ.தி.மு.க மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.சென்னை உயர் நீதிமன்றம்
அ.தி.மு.க தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தாக்கல் செய்த இந்த மனுவில், `உண்மை சரிபார்ப்புக் குழு அமைக்கப்பட்டிருப்பது பொதுமக்களின் பேச்சு சுதந்திரத்தின்மீதான தாக்குதல். எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் முயற்சி. அதுமட்டுமல்லாமல், ஆளுங்கட்சியின் ஆதரவாளரான ஐயன் கார்த்திகேயனைத் திட்ட இயக்குநராக அரசு நியமித்திருக்கிறது. எனவே இதற்குத் தடை விதிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.``திமுக - பாஜக கூட்டணி வைப்பதற்கு வாய்ப்பு அதிகம்!” - கொளுத்திப்போடும் சி.டி.ஆர்.நிர்மல் குமார்
http://dlvr.it/SyfwH0
Friday 10 November 2023
Home »
» `ஐயன் கார்த்திகேயன் தலைமையில் உண்மை சரிபார்ப்புக் குழு அமைப்பதா?'- நீதிமன்றத்தில் முறையிடும் அதிமுக!