ஏர் இந்தியா நிறுவனம் டாடா நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்ட பிறகும் மும்பையில் உள்ள 23 மாடிகள் கொண்ட ஏர் இந்தியா தலைமை அலுவலக கட்டிடம் தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அக்கட்டிடத்தை விலைக்கு வாங்க மாநில அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதில் தற்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதையடுத்து ஏர் இந்தியா கட்டிடத்தை விலைக்கு வாங்குவதற்கு மகாராஷ்டிரா அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஏலம் போன `ஏர் இந்தியா' - மத்திய அரசு, டாடா நிறுவனம்; யாருக்கு லாபம்?
இதில் 1601 கோடிக்கு ஏர் இந்தியா கட்டிடத்தை விலைக்கு வாங்க முடிவு செய்யப்பட்டது. தென் மும்பை முழுவதும் மாநில அரசு அலுவலகங்கள் அதிக அளவில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தற்போது ஏர் இந்தியா கட்டிடத்தை விலைக்கு வாங்குவதன் மூலம் வாடகை கட்டிடத்தில் இயங்கும் அனைத்து அரசு அலுவலகங்களும் ஏர் இந்தியா கட்டிடத்திற்கு மாற்றப்படும். இதன் மூலம் மாநில அரசுக்கு ஆண்டுக்கு 200 கோடி வாடகை கொடுப்பது மிச்சமாகும்.
அரபிக்கடலை நோக்கி இருக்கும் இக்கட்டிடத்தில் முதலில் டி.சி.எஸ்.நிறுவனம் மற்றும் சில தனியார் கம்பெனிகள் செயல்பட்டு வந்தன. இப்போது நிதியமைச்சகத்தின் கீழ் வரக்கூடிய வருமான வரித்துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. மாநில அரசு இக்கட்டிடத்தை விலைக்கு வாங்கிய பிறகு அதில் இருக்கும் அனைத்து அலுவலகங்களும் காலி செய்யப்பட்டுவிடும். கட்டிடம் இருக்கும் நிலம் ஏர் இந்தியாவிற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஏர் இந்தியா நிறுவனம் அதனை விற்பனை செய்வதால் நிலத்தின் மார்க்கெட் விலையில் 8-ல் ஒரு பங்கு பணத்தையும் சில அபராதத்தையும் அரசுக்கு செலுத்தவேண்டும். ஆனால் அக்கட்டணத்தையும் மாநில அரசு தள்ளுபடி செய்யவேண்டும் என்று ஏர் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.ஏர் இந்தியா9,000 ஏக்கர் நிலம்; கோடிக்கணக்கில் வருமானம்... விவசாயிகளுக்கு ஓய்வூதியம்... எங்கே தெரியுமா?
2018-ம் ஆண்டிலிருந்து இந்த கட்டிடத்தை வாங்க மாநில அரசு ஏர் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏர் இந்தியா நிறுவனம் கட்டிடத்தின் மதிப்பு 2000 கோடி என்று தெரிவித்தது. ஆனால் மாநில அரசு அதனை 1,450 கோடிக்குத்தான் மதிப்பீடு செய்தது. அதோடு ஏர் இந்தியா நிறுவனம் 300 கோடி வரை அக்கட்டிடத்திற்காக மாநில அரசுக்கு கொடுக்கவேண்டும் என்றும் அதனை கழித்துக்கொண்டு 1200 கோடி வரை கொடுக்க தயாராக இருப்பதாக மாநில அரசு தெரிவித்தது. இதனால் பேச்சுவார்த்தையில் மேற்கொண்டு முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதையடுத்து 2021-ம் ஆண்டு உத்தவ் தாக்கரே அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது. அதிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. 2022-ம் ஆண்டு 2600 கோடி தர மாநில அரசு முன் வந்தது. அதனை ஏர் இந்தியா ஏற்றுக்கொண்டது. மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் டெல்லி சென்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை சந்தித்து பேசியதை தொடர்ந்து ஏர் இந்தியா இந்த ஒப்பந்ததிற்கு சம்மதம் தெரிவித்தது. இதே கட்டிடத்தை விலைக்கு வாங்க ரிசர்வ் வங்கியும் முயற்சி மேற்கொண்டது.தேவேந்திர பட்னாவிஸ்முகேஷ் அம்பானி வாங்கும் ரூ.20,000 கோடி கடன்... ஏன் இந்த அளவுக்குப் பெரிதாக கடனை வாங்குகிறார்?
2018-ம் ஆண்டு இக்கட்டிடத்தை விற்பனை செய்ய ஏர் இந்தியா நிறுவனம் டெண்டர் விட்டது. ஆனால் அதற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது மாநில அரசுக்கும் ஏர் இந்தியாவிற்கும் ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. 1601 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்ள மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/Syspkq
Wednesday 15 November 2023
Home »
» ஏர் இந்தியா கட்டிடத்தை ரூ.1600 கோடிக்கு வாங்கும் மகாராஷ்டிரா அரசு... 5 ஆண்டு இழுபறிக்கு முடிவு!