`மனைவியின் வயது 18 அல்லது அதற்கு மேல் இருந்தால் மனைவியின் விருப்பத்துக்கு எதிரான கட்டாய உறவு (Marital rape) குற்றமாகக் கருதப்படாது' என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
2013-ல் சஞ்சீவ் குப்தா என்பவர் மீது அவரின் மனைவி காசியாபாத்தில் வரதட்சணை தடை சட்டம், கட்டாய பாலுறவு மற்றும் பிற இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருந்தார். காசியாபாத் விசாரணை நீதிமன்றம் மேற்கூறிய பிரிவுகளின் கீழ் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. மேல்முறையீட்டிலும் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. Marriage (Representational Image)குழந்தைக்கும் மனசு பாதிக்குமா..? | மகிழ்ச்சி - 11
இதனை எதிர்த்து சஞ்சீவ் குப்தா, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை (revision petition) தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணையில், ``இந்திய தண்டனை சட்ட பிரிவு 377-ன் கீழ், நமது நாட்டில் மனைவியின் விருப்பத்துக்கு எதிரான கட்டாய உறவு இன்னும் குற்றமாகக் கருதப்படவில்லை.
இதனை குற்றமாக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சில மனுக்கள் பரிசீலனைக்கு நிலுவையில் உள்ளன. ஆனால், அந்த மனுக்கள் மீது எந்த முடிவும் வரும் வரை, மனைவி 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக இருக்கும்போது மேரிட்டல் ரேப் என்பது குற்றவியல் தண்டனை இல்லை.
15 முதல் 18 வயதுக்குட்பட்ட ஆணுக்கும் அவரின் மனைவிக்கும் இடையே கட்டாய உடலுறவு இருப்பின் அது பாலியல் வன்கொடுமைக்குச் சமமாகக் கருதப்படும்.
இந்த வழக்கில் ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ள மருத்துவ சான்றுகளும் இயற்கைக்கு மாறான பாலியல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் இல்லை.
அதுமட்டுமல்லாமல் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377 விதியைப் போல பாரதிய நியாய சன்ஹிதாவில் (Bharatiya Nyaya Sanhita Bill, 2023) இது போன்ற எந்த விதியும் சேர்க்கப்படவில்லை’’ என்று கூறி இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377-ன் கீழ் குற்றவாளி அல்ல என்று கூறியுள்ளது.courtமனைவியின் விருப்பத்துக்கு எதிரான கட்டாய உறவு வழக்கு; இரு நீதிபதிகளின் முரண்பட்ட தீர்ப்பு!
இந்தப் பிரிவின் கீழ் விடுவிக்கப்பட்டாலும் வரதட்சணை மற்றும் தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்துதல் போன்ற இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 498A மற்றும் 323-ன் கீழ் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது.
லோக் சபாவில் முன்மொழியப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா மசோதா இயற்றப்பட்டால் தற்போதுள்ள இந்திய தண்டனை சட்டம் மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மனைவி 18 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பின் மனைவியின் விருப்பத்துக்கு எதிரான கட்டாய உறவு (Marital rape) குற்றமாகக் கருதப்படாது என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து உங்களின் கருத்தென்ன?... கமென்டில் சொல்லுங்கள்!
http://dlvr.it/Szzrs9
Monday 11 December 2023
Home »
» ``மனைவியின் வயது 18-க்கு மேல் இருந்தால் Marital Rape குற்றமல்ல..." - அலகாபாத் உயர்நீதிமன்றம்!